Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லட்சுமியின் என்டிஆர் டிரைலர் - அடுத்த பரபரப்பு ஆரம்பம்

14 பிப், 2019 - 14:06 IST
எழுத்தின் அளவு:
Lakshmi-NTR-Trailer-out

தெலுங்குத் திரையுலகில் இப்போது பயோபிக் டிரென்ட் போய்க் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மகாநடி படமாக எடுத்து வெளியிட்டு பெரும் வரவேற்பைப் பெற்றார்கள். அதற்கடுத்து முன்னாள் முதல்வர், நடிகர் என்டிஆர் வாழ்க்கை வரலாறு அவருடைய மகன் பாலகிருஷ்ணாவால் என்டிஆர் கதாநாயகடு ஆக வெளிவந்து எதிர்பாராத தோல்வியைத் தழுவியது. கடந்த வாரம் முன்னாள் முதல் ஒய்எஸ்ஆர் வாழ்க்கை வரலாறு யாத்ரா என்ற பெயரில் வெளிவந்து சுமாராக ஓடிக் கொண்டிருக்கிறது.

அடுத்து பிப்ரவரி 22ம் தேதி என்டிஆர் கதாநாயகடு படத்தின் இரண்டாம் பாகமாக என்டிஆர் மகாநாயகடு படம் வெளியாக உள்ளது. அந்தப் படத்திற்குப் போட்டியாக ராம்கோபால் வர்மா உருவாக்கியுள்ள படமான லட்சுமியின் என்டிஆர் படமும் அதன்பின் வெளிவர உள்ளது.

இன்று லட்சுமியின் என்டிஆர் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இதுதான் உண்மையான பயோபிக் படம் என டிரைலரைப் பார்த்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். என்டிஆரின் தனிப்பட்ட மற்றும் அரசியல் வாழ்க்கையில் லட்சுமி பார்வதி நுழைந்த பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

படத்தில் தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, என்டிஆர் இளைய மகன் பாலகிருஷ்ணா ஆகியோர் எப்படி சித்தரிக்கப்பட்டுள்ளார்கள் என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. படம் வெளிவரும் போது நிச்சயம் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாகத்தான் படத்தின் டிரைலர் அமைந்துள்ளது.




Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
1 கோடி கேட்கும் பிரியா வாரியர் ?1 கோடி கேட்கும் பிரியா வாரியர் ? கீழ்தரமான போஸ்டர் : விஜய் சேதுபதி கோபம் கீழ்தரமான போஸ்டர் : விஜய் சேதுபதி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in