Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்ஜிகே டீசர் வெளியீடு - காத்திருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி

14 பிப், 2019 - 13:23 IST
எழுத்தின் அளவு:
NGK-Teaser-out-:-Fans-happy

செல்வராகவன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி மற்றும் பலர் நடிக்கும் என்ஜிகே படத்தின் டீசர் இன்று(பிப்.,14) வெளியானது. முதல் முறையாக செல்வராகவன், சூர்யா கூட்டணி இணைந்ததால் இந்தப் படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே எதிர்பார்ப்பு இருந்தது.

படம் பற்றிய அப்டேட் கொடுங்கள் என அடிக்கடி தயாரிப்பாளரிடமும், இயக்குனரிடமும் சூர்யாவின் ரசிகர்கள் தொந்தரவு செய்து கொண்டே இருந்தார்கள். அவர்களின் நீண்ட நாளைய காத்திருப்பு நிறைவேறியது. அந்தக் காத்திருப்பு டீசரைப் பார்த்ததும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியில் தான் முடிந்திருக்கும். டீசர் முடிவிலேயே சூர்யா காத்திருப்போம் எனப் பேசி முடிப்பது அதற்குப் பொருத்தமாகவே இருக்கிறது.

இது ஒரு அரசியல் படம் என்பது டீசரைப் பார்த்ததுமே புரிந்துவிடும். கிராமத்திலிருந்து கிளம்பி அரசியல் சாக்கடையை சுத்தப்படுத்த வரும் நாயகனாக சூர்யா நடிக்கிறார் என்று தெரிகிறது. ஆனால், அவர் ஒரு கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்கிறாரா அல்லது இரண்டு மூன்று தோற்றத்தில் நடிக்கிறாரா என்பதுதான் குழப்பமாக உள்ளது. கிராமத்து இளைஞர், வட இந்திய இளைஞர், இளம் அரசியல்வாதி என சிலபல தோற்றங்கள் டீசரில் இடம் பெற்றுள்ளது.

ரகுல் ப்ரீத், சாய் பல்லவி ஓரிரு டயலாக் மட்டுமே பேசுவதால் அவர்களது கதாபாத்திரங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. மற்ற நடிகர்களில் பொன்வண்ணன், தலைவாசல் விஜய், வேலராமமூர்த்தி ஆகியோர் டீசரில் ஒரு சில வினாடிகள் வந்து போகிறார்கள்.

யுவன் ஷங்கர் ராஜா தீம் மியுசிக்கில் அசத்தியிருப்பார் என்பது டீசரிலேயே தெரிகிறது. பாடல்கள் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் அவரது ரசிகர்களுக்கு வந்திருக்கும்.

படம் என்ன மாதிரியான அரசியலைப் பேசப் போகிறது என்பதுதான் அடுத்த எதிர்பார்ப்பாக இருக்கும். புதுப்பேட்டை போன்ற வேறு ஒரு அரசியல் களமாக என்ஜிகே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.




Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நயன்தாராவுடன் மீண்டும் நடிக்க ஆசை :  ஜெய் பேட்டிநயன்தாராவுடன் மீண்டும் நடிக்க ஆசை : ... அலேகா அடல்ட் படம் அல்ல: ஆரி விளக்கம் அலேகா அடல்ட் படம் அல்ல: ஆரி விளக்கம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

santhosh -  ( Posted via: Dinamalar Android App )
15 பிப், 2019 - 01:41 Report Abuse
santhosh flop confirm
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in