Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாராவுடன் மீண்டும் நடிக்க ஆசை : ஜெய் பேட்டி

14 பிப், 2019 - 12:55 IST
எழுத்தின் அளவு:
Jai-likes-to-act-with-Nayanthara-again

நடிகர் ஜெய் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ள மாட்டார். பத்திரிகையாளர்களை சந்திக்க மாட்டார். அஜித் பாணியில் அவர் இந்த பாலிசியை வைத்திருந்தார். ஆனால் இப்போது அவரிடம் திடீர் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் அளித்த பேட்டி வருமாறு:

பொதுவாக நான் கூச்ச சுபாவம் உள்ளவன். அதனால் தான் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்த்து வந்தேன். ஆனால் இப்போது மாறிவிட்டேன். எனக்கும் இப்போது கைநிறைய படங்கள் இருக்கிறது. நான் நடித்து முடித்துள்ள பார்ட்டி, நீயா 2 படங்கள் வெளிவர வேண்டியது இருக்கிறது. இது தவிர மகாராஜா என்ற படத்தில் மம்முட்டி தம்பியாக நடிக்கிறேன்

எனக்கும், அஞ்சலிக்கும் காதல் என்று பல காலமாக மீடியாக்கள் எழுதி வருகின்றன. அதில் உண்மையில்லை அஞ்சலி எனக்கு நெருக்கமான தோழி. இப்போதும் அந்த நட்பை தொடர்கிறோம். அவரும், நானும் சினிமாவில் பிஸியாக இருக்கிறோம். நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.

நான் நடித்த ஹீரோயின்களில் நயன்தாரா தான் பிடிக்கும். ராஜா ராணி படத்தில் நடித்தபோது அவருக்கும், எனக்கும் நல்ல நட்பு உருவானது. இப்போதும் நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். அவருடன் மீண்டும் ஜோடியாக நடிக்கும் ஆசையில் இருக்கிறேன். ராஜா ராணி படத்தில் காதலை விட்டுக் கொடுத்தேன். அப்படி விட்டுக்கொடுக்காமல் காதலிக்கிற மாதிரி நடிக்க வேண்டும்.

திருமணம் பற்றி இப்போது யோசிக்கவில்லை. எனது அண்ணன்கள் பலருக்கு திருமணம் ஆக வேண்டியது இருக்கிறது. குறிப்பாக பிரேம்ஜிக்கு பெண் கிடைக்கவில்லை அவனுக்கு முதலில் நடக்கட்டும்.

இவ்வாறு கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வறுமையால் படிக்க முடியாத மாணவர்களை அடையாளம் காட்டுங்கள் : சூர்யா வேண்டுகோள்வறுமையால் படிக்க முடியாத மாணவர்களை ... என்ஜிகே டீசர் வெளியீடு - காத்திருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி என்ஜிகே டீசர் வெளியீடு - காத்திருந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in