ஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார் | போலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல் | உடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம் | இறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி | எல்கேஜி பற்றி ஆர்.ஜே.பாலாஜி | புல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம் | என்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம் | வரம்பு மீறினால் பதிலடி கொடுப்பேன் : ரகுல் | புதன் முதல் ஒரு அடார் லவ்-க்கு புது கிளைமாக்ஸ் | அதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு |
கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. அது, காக்க காக்க 2 படம் என்றும், கலைப்புலி தாணு தயாரிக்க இருப்பதாகவும் கூடுதல் தகவல்களும் சொல்லப்பட்டு வருகிறது. சூர்யா தரப்பில் விசாரித்தால் அப்படி ஒரு திட்டமே இல்லை என்று சொல்கிறாராம்.
என்.ஜி.கே., காப்பான் படங்களுக்குப் பின் சூர்யா நடிக்க உள்ள படம் எது என்பதை அவர் இன்னும் முடிவு செய்யவில்லையாம். இதற்கிடையில் கவுதம் மேனனின் அடுத்தப்படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும், அந்தப்படத்தை கே.பி.பிலிம்ஸ் கே.பாலு தயாரிக்க இருப்பதாகவும் உறுதியான தகவல் சொல்லப்படுகிறது.
சின்னதம்பி உட்பட பல படங்களை தயாரித்த கே.பாலு, கடந்த சில ஆண்டுகளாக படங்கள் தயாரிக்காமல், படங்களுக்கு பைனான்ஸ் மட்டும் செய்து வந்தார். இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு படம் தயாரிக்கிறார்.