Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கேரளத்தில் சூர்யா ரசிகர்கள் செய்த புதுமை முயற்சி

14 பிப், 2019 - 11:56 IST
எழுத்தின் அளவு:
NGK-Teaser-:-Kerala-fans-new-attempt

கேரளாவில் மலையாள ஹீரோக்களுக்கு நிகராக தமிழ் ஹீரோக்களுக்கு ரசிகர்களிடம் மாஸ் இருக்கிறது. இதில் முதலிடம் விஜய்க்குத்தான். கேரளாவில் விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் அவருக்கு உள்ளது. விஜய்க்கு அடுத்தபடியாக சூர்யாவுக்கு ஓரளவு ரசிகர்கள் உள்ளனர்.

கேரளத்தில் உள்ள ரசிகர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக தன்னுடைய படங்கள் வெளியாகும்போதெல்லாம் அங்கே சென்று தன்னுடைய படத்தை புரமோட் செய்கிறார் சூர்யா.

இந்நிலையில் என்.ஜி.கே. டீஸர் இன்று வெளியாகி உள்ள நிலையில் கேரளா கோழிக்கோட்டில் உள்ள சூர்யாவின் ரசிகரக்ள் என்.ஜி.கே. படத்தின் டீஸரை புதுமையான முறையில் கண்டுகளிக்க உள்ளனர். அதாவது, கோழிக்கோடு பீச்சில் அகன்ற திரையில் என்.ஜி.கே. டீஸரை திரையிட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை சூர்யா ரசிகர்கள் செய்திருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சி கோழிக்கோடு பீச்சில் இன்று மாலை 6 மணியிலிருந்து 7 மணி வரை நடைபெறுகிறது. ஒரு தமிழ் திரைப்படத்தின் டீஸர் பொதுவெளியில் மக்களின் பார்வைக்காக திரையிடப்படுவது கேரளாவில் இதுதான் முதல்முறை.

இதில் என்ன முக்கியமான விஷயம் என்றால், கோழிக்கோடு பீச்சில் என்.ஜி.கே படத்தின் டீஸரை திரையிடுவதற்கு அரசாங்கத்தை உரியமுறையில் அணுகி அனுமதியும் வாங்கியுள்ளனர்.

அந்த அனுமதி கடிதமும் சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது. அரசு அனுமதியில்லாமல் நடிகர்களுக்கு கட்அவுட், பேனர் வைக்கும் தமிழக ரசிகர்கள் இதை பின்பற்றலாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிறந்தநாளில் புதுமை செய்த ஆரிபிறந்தநாளில் புதுமை செய்த ஆரி சென்னையில் தயாராகும் ஆங்கிலப்படம் சென்னையில் தயாராகும் ஆங்கிலப்படம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in