உணர்ச்சிக் குவியலாய் வந்துள்ள 'பொன்னியின் செல்வன் 2' டிரைலர் | ‛பொன்னியின் செல்வன் 2' இசை வெளியீடு கோலாகலம் : சிவப்பு கம்பள வரவேற்பில் நனைந்த திரைப்பிரபலங்கள் | டப்பிங் யூனியன் சீல் அகற்றம் | ஒய் திஸ் கொலவெறி பாடலுடன் நாட்டு நாட்டு பாடலை ஒப்பிட்ட கீரவாணி | விடுதலை படம் சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது : பவானி ஸ்ரீ | மார்ச் 31ல் ஆர்யாவின் அடுத்த பட டீசர் வெளியீடு | மீண்டும் சர்ச்சையில் நாக சைதன்யா, ஷோபிதா காதல் | போலா 2ம் பாகத்திற்கு லீட் கொடுத்த அபிஷேக் பச்சனின் சர்ப்ரைஸ் என்ட்ரி | இளையராஜா இசையில் ஹிந்தியில் உருவான மியூசிக் ஸ்கூல் | இறப்பதற்கு முன் மஞ்சு வாரியரிடம் இன்னொசென்ட் சொன்ன கடைசி வார்த்தை |
ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை துவக்கிய ஆர்.ஜே.பாலாஜி, சினிமாவில் காமெடி நடிகரானார். தற்போது, 'எல்.கே.ஜி.,' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாகி உள்ளார். அரசியல், காமெடி என இரண்டும் கலந்து உருவாக்கி இருக்கும் அந்தப் படத்தில், பாலாஜிக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்து இருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில், பிரபல அரசியல் பிரமுகர் நாஞ்சில் சம்பத் நடித்திருக்கிறார். வரும் 22ல் படம் ரிலீசாகிறது.
இந்தப் படத்தில், தற்போதைய அரசியல் நிகழ்வுகளை, காமெடியாக கலந்து சொல்லியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்தப் படத்தின் டீசர் வெளியாகி, பெரும் பாரட்டைப் பெற்றிருக்கிறது.
இந்நிலையில், இந்தப் படத்துக்கு, பிரபல கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்த்து செய்தி அனுப்பி இருக்கிறார். கிரிக்கெட் வர்ணனை செய்தபோது, கிரிக்கெட் வீரர் கபில்தேவுக்கும், ஆர்.ஜே.பாலாஜிக்கும் தொடர்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, தற்போது, பாலாஜியின் படத்துக்கு கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்த்து அனுப்பி உள்ளார். இதற்காக, வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் கபில்தேவ், அதில் கூறியிருப்பதாவது:
வணக்கம் நான் கபில்தேவ். ஆர்.ஜே.பாலாஜிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். கிரிக்கெட் விளையாடுவது என்பது மிக எளிமையான ஒன்று. ஆனால், திரைப்படங்களில் நடிப்பது மிகக் கடினம். இதை ஒரு கிரிக்கெட் வீரராக, நான் சில சமயங்களில் நினைப்பதுண்டு. அப்படிப்பட்ட சினிமாவில், கதாநாயகனாக கால் பதிக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். அப்படிப்பட்ட சினிமாத் துறையில் இருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். நீங்கள், பெரிய நாயகனாக வர வேண்டும். உங்கள் 'எல்.கே.ஜி.,' படம் மிகப் பெரிய அளவில் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
இவ்வாறு அந்த வீடியோவில், கபில்தேவ் பேசியுள்ளார். இதை படத்தில், துவக்கமாக வைப்பது குறித்து, படக் குழு யோசித்து வருகிறது.