Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெருக்கூத்தை மையமாக கொண்டு உருவாகும் படம்

13 பிப், 2019 - 13:35 IST
எழுத்தின் அளவு:
A-movie-based-on-Therukoothu

பீச்சாங்கை படத்தின் மூலம் பேசப்பட்டவர் ஆர்.எஸ்.கார்த்திக். தற்போது அவர், நடித்து வரும் படத்தை எம்.ஜி.எம். என்ற நிறுவனம் தயாரிக்கிறது. ஆதிரை இயக்குகிறார். மனிஷா ஜித் ஹீரோயின், இவர்கள் தவிர மாரிமுத்து, சிவசங்கர் மாஸ்டர், தவசி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜெய்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். செல்வம் நம்பி இசை அமைக்கிறார். இது அழிந்து வரும் தெருக்கூத்து கலையை பின்னணியாக கொண்டு உருவாகும் படம். இதுகுறித்து இயக்குனர் ஆதிரை கூறியதாவது:

கூத்து என்பது சினிமாவின் முதல்படியாகும், கலையின் ஆதி வடிவம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கலை அழிந்து கொண்டு வருகிறது. அன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் கூத்து நடக்கும். ஆனால் இந்த காலகட்டத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் கூத்து நடப்பதே ஆச்சரியமாக இருக்கிறது.

கூத்து அழிந்து விடக் கூடாது. அந்த கலையை காப்பாற்ற வேண்டும். அதனை பதிவு செய்யும் பொருட்டே இந்த படத்தை இயக்கி வருகிறேன். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. முதலாம் கட்டப் படபிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சிதம்பரம் அருகே உள்ள வெள்ளயங்குடி கிராமத்தில் துவங்கியுள்ளது. 1980களின் காலத்தை காண்பிக்கும் வகையில் பல நாடக கலைஞர்களுடன் அரங்கம் அமைத்து படபிடிப்பு நடைபெற உள்ளது என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வில்லிக்கு மாறும் சோனாவில்லிக்கு மாறும் சோனா தர்மபிரபுவில் இணைந்த ஜனனி தர்மபிரபுவில் இணைந்த ஜனனி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Bhaskaran - Chennai,இந்தியா
13 பிப், 2019 - 17:24 Report Abuse
Bhaskaran தமிழக அரசு நிதியுதவிசெய்யலாமே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in