Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பகவத் கீதையை அவமதித்தாரா.? - விஷமிகளால் வம்பில் மாட்டிய விஜய் சேதுபதி

12 பிப், 2019 - 18:27 IST
எழுத்தின் அளவு:
Vijay-Sethupathi-blasts-fake-tweet-accusing-him-of-disrespecting-Bhagavad-Gita

சினிமாவில் மட்டுமல்லாது சமூகம் சார்ந்த விஷயங்களுக்கும் குரல் கொடுப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. கடந்த 6ம் தேதி செல்போன் திருட்டை கண்டுபிடிக்க உதவும் வகையில் போலீசாரால் அறிமுகம் செய்யப்பட்ட, டிஜிகாப் செயலி நிகழ்ச்சியில் பங்கேற்றார். செல்போன் பறிப்பு சம்பவங்களால் மக்களிடையே அச்சம் நிலவுகிறது. காவல்துறைக்கும், பொதுமக்களுக்குமான இடைவெளி, டிஜிகாப் செயலி மூலம் குறையும் என்றார்.

இது டிவி சேனல் ஒன்றின் டுவிட்டரில் பதிவாகி இருந்தது. விஜய் சேதுபதி கூறிய கருத்துக்கு மாறாக, பகவத் கீதையை அவதூறு கூறுவதுபோல் இருக்கும் வாசகத்தை போட்டோஷாப்பில் மாற்றி விஷமிகள் சிலர் பரப்பினர். விஜய் சேதுபதி பகவத் கீதையை அவமதிக்கிறார் என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்ததால் சர்ச்சையானது.

இந்த விஷயம் விஜய் சேதுபதியின் காதுக்கு வர உடனடியாக டுவிட்டரில் விளக்கம் கொடுத்தார். அதில், "என் அன்பிற்குரிய மக்களுக்கு பகவத்கீதை மட்டுமல்ல, எந்த ஒரு புனிதநூலை பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாக பேசியதும் இல்லை, பேசவும் மாட்டேன். சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது. எந்த சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும், ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்து கொள்ளவே மாட்டேன்". என பதிவிட்டார்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மகள் திருமணம் : ரஜினி நன்றிமகள் திருமணம் : ரஜினி நன்றி ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' 2020 கோடையில் வெளியீடு ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' 2020 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Mithun - Bengaluru,இந்தியா
15 பிப், 2019 - 02:06 Report Abuse
Mithun நண்டு கொழுத்தா வளையில தங்காது.
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
13 பிப், 2019 - 17:13 Report Abuse
Bhaskaran பெரியார் விருது வாங்கியதற்கு நன்றிக்கடனாக சொல்லிவிட்டார் என்று தான் அனைவரும் நினைப்பார்கள்
Rate this:
Denial - Telangana,இந்தியா
13 பிப், 2019 - 10:22 Report Abuse
Denial நம்பிட்டோம், நீ சபரிமலை சம்பந்தமாக வெளியிட்ட பேட்டியே உன்னை யார் என்பதை மக்களுக்கு காட்டிக்கொடுத்துவிட்டது. நீ அந்த பினராயிக்கு சப்போர்ட் பண்ற கம்மிகளின் ஜால்றா. அடுத்தவர்கள் வழியில் யாராக இருந்தாலும் கூறிக்கூடாது அதுதான் நல்ல மனிதர்களுக்கு அழகு. இவன் படத்தை பார்ப்பதை யாராக இருந்தாலும் தவிர்க்கவேண்டும்.
Rate this:
V.Rajeswaran - chennai,இந்தியா
13 பிப், 2019 - 10:12 Report Abuse
V.Rajeswaran விஜய் சேதுபதி உன் நாசகார கம்யூனிச கொள்கைகள் என்ன என்பது தெரியும் நீ தான் திராவிட கூட்டத்தில் நாத்திகம் என்ற பெயரில் இந்துமதத்தை இழிவு செய்தவன் தானே நீ
Rate this:
தலைவா - chennai,இந்தியா
13 பிப், 2019 - 09:12 Report Abuse
தலைவா விஜய் சேதுபதியை கண்டு சிலருக்கு தொடை நடுக்கம் அவருக்கு இருக்கும் எதார்த்தமான அறிவும் அவருடைய எதார்த்தமான கருத்துகளையும் திரித்து அவரை சமூக விரோதி போல காட்ட துடிக்கின்றனர். இது சபரிமலை பற்றிய விஷயத்தில் அவருடைய அபிப்ராயத்தை சொல்லியத்திற்கு பழி வாங்கும் விதமாக கோழைகள் இச்செயலில் ஈடு பட்டுள்ளனர். ஆனால் மக்கள் ஒற்றுமையையும் நம்பிக்கையையும் குலைக்கும் விதமாக நடந்து கொள்ள மாட்டேன் என்று சொல்லியிருப்பது உயரிய நல்ல தலைமைக்கு உரிய பண்பு.
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Ayogya
  • அயோக்யா
  • நடிகர் : விஷால்
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :வெங்கட் மோகன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in