Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ஹாட்ரிக்' வெற்றியில் 'ஹாட்ரிக்' பெறுவாரா கார்த்தி?

12 பிப், 2019 - 16:35 IST
எழுத்தின் அளவு:
Did-Karthi-get-hatric

தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தியும் அவருக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அவர் நடித்து கடைசியாக வெளிவந்த 'கடைக்குட்டி சிங்கம், தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய இரண்டு படங்களும் பெரிய வரவேற்பையும், வசூலையும் குவித்த படங்களாக அமைந்தன. அந்த இரண்டு படங்களின் வெற்றியால் கார்த்தியின் இமேஜும், மார்க்கெட்டும் நன்றாகவே உயர்ந்தது.

அடுத்து அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் மற்றம் பலர் நடித்துள்ள 'தேவ்' படம் பிப்ரவரி 14ம் தேதியன்று வெளியாகிறது. இந்தப் படம் ஒரு ஜாலியான படமாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தை நிறையவே செலவு செய்து எடுத்துள்ளார்கள். வெளிநாடுகளிலும் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள்.

'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் கார்த்தி, ரகுல் இடையிலான காதல் கொஞ்ச நேரமே வந்தது. இந்தப் படம் முழுவதிலும் இருவரும் காதலித்துக் கொண்டேதான் இருக்கிறார்களாம்.

கார்த்தி நடிப்பில் வெளிவர உள்ள 17வது படம் 'தேவ்'. இதற்கு முன் கார்த்தி 'பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை' என முதல் ஹாட்ரிக்கையும், 'மெட்ராஸ், கொம்பன், தோழா' என இரண்டாவது ஹாட்ரிக் வெற்றியையும் பெற்றிருக்கிறார். அடுத்து 'தேவ்' படமும் வெற்றி பெற்றால் மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றியைப் பெறுவார். 'தேவ்' வெற்றி பெற்றால் ஹாட்ரிக் வெற்றியில் ஒரு ஹாட்ரிக்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
100 குழந்தைகளோடு நடிகர் விஜய் நடனம்100 குழந்தைகளோடு நடிகர் விஜய் நடனம் சத்ருவில் 24 மணி நேர கதை சத்ருவில் 24 மணி நேர கதை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in