பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் |
நடிகர் விஜய் 'சர்க்கார்' படத்தை அடுத்து, இயக்குநர் அட்லி இயக்கும் படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. அதனால், 'தளபதி 63' என பெயர் சூட்டி, படத்தை வேகமாக எடுத்து வருகின்றனர். படத்தில் நயன்தாரா, கதிர், யோகி பாபு, விவேக், டேனியல் பாபு, ஆனந்த ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் ஓப்பனிங் பாடல் பக்கா மாஸ் பாடலாக இருக்க வேண்டும் என, இயக்குநர் அட்லி கேட்டுக் கொண்டதற்கு இணங்க, லோக்கலாக ஒரு பாடலை மெட்டமைத்து, தயார் செய்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
இந்தப் பாடலை, சென்னை, பெரம்பூரில் இருக்கும் பின்னி மில்லில் வைத்து சூட்டிங் நடத்தி, படமாக்கி இருக்கின்றனர். இந்தப் பாடலில் 600க்கும் அதிகமானோர் கலந்து கொள்ள மிகப் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, 100 குழந்தைகளோடு, நடிகர் விஜய் நடனமாகி பாடல் படமாக்கப்பட்டிருக்கிறது. வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்வது போல, திட்டமிட்டு, 'தளபதி 63' படமாக்கப்பட்டு வருகிறது.