யேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை! - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா! | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |
லண்டன்: பிரிட்டன் திரைப்பட துறையின் உயரிய கவுரவமாக கருதப்படும், பாப்தா விருதுகள், நேற்று வழங்கப்பட்டன. சிறந்த திரைப்படத்திற்கான விருதை, ரோமா பெற்றுள்ளது.
பாப்தா எனப்படும், பிரிட்டன் அகாடமி என்ற அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும், சிறந்த திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில், 72வது பாப்தா விருது வழங்கும் விழா, நேற்று முன்தினம் இரவு, லண்டனில் நடந்தது. விழாவில், மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த, ரோமா, சிறந்த திரைப்படத்துக்கான விருதை பெற்றது.
ஆங்கிலம் அல்லாத மொழியில் உருவாக்கப்பட்ட சிறந்த படத்திற்கான விருதையும், ரோமா பெற்றது.இந்த படத்தை, இயக்கிய, அல்போன்சா குவரோன், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதுகளை பெற்றார். இதன் மூலம், ரோமா திரைப்படம், மொத்தம் நான்கு விருதுகளை பெற்றது. சிறந்த நடிகருக்கான விருதை, போகிமியன் ராப்சோடி படத்தில் நடித்த, ராமி மாலேக் பெற்றார்.
தி பேவரைட் படத்தில் நடித்த, ஒலிவியா கோல்மன், சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டார். 12 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட, தி பேவரைட் திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த பிரிட்டன் திரைப்படம் உள்ளிட்ட ஏழு விருதுகளை அள்ளியது.
கிரீன் புக் படத்தில் நடித்த, மஹெர்ஷாலா அலி, சிறந்த துணை நடிகராகவும், தி பேவரைட் படத்தில் நடித்த, ரேச்சல் வைசிஸ், சிறந்த துணை நடிகையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.