Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தியேட்டர்களில் தின்பண்டங்கள் அனுமதிக்க, உத்தரவிட முடியாது: நீதிமன்றம்

12 பிப், 2019 - 12:48 IST
எழுத்தின் அளவு:
Allowing-snacks-in-Theatres-:-Court

தற்போது தியேட்டர்களுக்குள் வெளியில் இருந்து தின்பண்டங்களோ, தண்ணீர் பாட்டிலோ எடுத்துச் செல்லமுடியாது. தியேட்டரில் உள்ள கேன்டீனில்தான் வாங்க வேண்டும். தியேட்டர் கேன்டீன்களில் வெளி விலையை விட பல மடங்கு விலை வைத்து விற்கப்படுகிறது. இதனால் தியேட்டர்களுக்குள் வெளியிலிருந்து கொண்டு செல்லப்படும் தின்பண்டங்களையும், தண்ணீர் பாட்டில்களையும் அனுமதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் எஸ்.தமிழ்செல்வன் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நலவழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிகுமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அளித்த தீர்ப்பில் கூறியதாவது: தியேட்டர் என்பது தனியாரின் சொத்து. அதற்குள் உணவு பொருட்களை எடுத்துச் செல்ல உத்தரவிட சட்டத்தில் இடம் இல்லை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம். என்று தங்கள் தீர்ப்பில் நீபதிகள் தெரிவித்தனர். இது தியேட்டர் அதிபர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சினிமா வட்டாரத்தில் இது முக்கியமான தீர்ப்பாக கருதப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
3 படங்களையும் முந்தும் கள்ளபார்ட்3 படங்களையும் முந்தும் கள்ளபார்ட் ஒளிப்பதிவாளர் சங்கத் தேர்தல் : பி.சி.ஸ்ரீராம் அணி வெற்றி ஒளிப்பதிவாளர் சங்கத் தேர்தல் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
14 பிப், 2019 - 06:55 Report Abuse
Mirthika Sathiamoorthi மிகவும் சரியான தீர்ப்பு...இங்கு தின்பண்டங்கள் அல்ல பிரச்சனை எது தின்பண்டங்கள் என்பதே மிக பெரிய பிரச்சனை...திரையரங்கில் விற்கப்படும் தின்பண்டங்கள் ஒரு கட்டுபாடு உண்டு. இதுதான் விற்கப்படும்... திரையரங்கை சுத்தமாகவும் கெட்ட வாசனைகளில் இருந்தும் மற்றும் குறுகிய நேரத்தில் முடிந்துவிடும்...வெளியில் இருந்து வரும் பண்டங்களுக்கு கட்டுபாடு? கட்டுச்சோறு கட்டிவந்தால் அப்புறம் அவர்கள் சாப்பிட்டு போட்ட எச்ச இலையும் திரையரங்கம் சுத்தம் செய்யவேண்டும்...குப்பைகள் மலைபோல் குவியும்...அதை வெளியில் கொண்டு செல்ல கடும் செலவு செய்ய வேண்டும்...இதைத்தான் திரையரங்கில் கொண்டு வரவேண்டும் என கண்காணிக்க முடியுமா? மது வகைகள் உள்ளே வர ஆரம்பிக்கும்...இதுக்கெல்லாம் யார் பொறுபேர்பது...? வேண்டுமென்றால் டிரைவ் ன் தியேட்டர்கள் அதிகரிக்கலாம்..தின்பண்டங்களை உள்ளே அனுமதிக்க கூடாது...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in