Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மார்ச் 1ல் சத்ரு ரிலீஸ்

12 பிப், 2019 - 10:42 IST
எழுத்தின் அளவு:
Sathru-releasing-on-March-1

பரியேறும் பெருமாள் படத்தை அடுத்து கதிர் நடிப்பில் சமீபத்தில் சிகை என்ற படம் வெளியானது. அந்தப்படம் தியேட்டர்களில் வெளியிடப்படாமல் நேரடியாக டிஜிட்டலில் வெளியானது. சிகை படத்தை அடுத்து கதிர் நடிப்பில் வெளியாக உள்ள படம் சத்ரு. ஸ்ருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்துள்ளார்.

24 மணி நேரத்தில் நடக்கும் ஆக்ஷன் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள 'சத்ரு' படத்தை நவீன் நஞ்சுண்டான் என்ற அறிமுக இயக்குநர் இயக்கியுள்ளார். 'ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் சார்பில் ரகு குமார் என்கிற திரு மற்றும் ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

'சத்ரு' படத்தில் கதிர் போலீஸ் அதிகாரியாக நடிக்க, இவருடன் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா, பவன், அர்ஜுன் ராம், ரகுநாத் உட்பட பலர் நடிக்கின்றனர். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு அம்ரிஷ் இசை அமைத்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது.

இந்நிலையில் 'மரகதநாணயம்', 'ராட்சசன்' ஆகிய படங்களை தயாரித்த டில்லி பாபு, சத்ரு படத்தை பார்த்திருக்கிறார். 'சத்ரு' படம் டில்லி பாபுவுக்கு பிடித்து போனதால், இப்படத்தின் விநியோக உரிமையை வாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து 'சத்ரு' படத்தை மார்ச் 1-ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார் டில்லி பாபு.

சத்ரு படத்தை வெளியிட்ட உடனே தன்னுடைய மகனை ஹீரோவாக வைத்து, ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார் டில்லிபாபு.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அதர்வா உடன் மீண்டும் கூட்டணிஅதர்வா உடன் மீண்டும் கூட்டணி 3 படங்களையும் முந்தும் கள்ளபார்ட் 3 படங்களையும் முந்தும் கள்ளபார்ட்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in