Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் சேதுபதி நடிக்கும் 'மாமனிதன்' படப்பிடிப்பு நிறைவு

12 பிப், 2019 - 10:22 IST
எழுத்தின் அளவு:
Maamanithan-shooting-wrapped

யுவன்ஷங்கர் ராஜா தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்க, விஜய் சேதுபதி, காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் 'மாமனிதன்' படப்பிடிப்பை நேற்றுடன் நிறைவு செய்துள்ளார்கள்.

சீனு ராமசாமி இயக்கிய 'தென்மேற்குப் பருவக்காற்று' படத்தில் நாயகனாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. அதன் பின் அவரது இயக்கத்தில் 'இடம் பொருள் ஏவல், தர்மதுரை' ஆகிய படங்களில் நடித்தார். அதில் 'தர்மதுரை' வெற்றிப் படமாக அமைந்தது. 'இடம் பொருள் ஏவல்' படம் இன்னும் வெளிவரவில்லை.

சீனுராமசாமி, விஜய் சேதுபதி நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்திருப்பதும், இளையராஜா, யுவன் முதன் முறையாக இணைந்து இப்படத்திற்கு இசையமைப்பதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

படப்பிடிப்பு நிறைவடைந்தது பற்றி சீனு ராமசாமி, ““மாமனிதன் படப்பிடிப்பு இனிதே நிறைவுற்றது. எங்கள் படத்திற்கும், பதிவு செய்த பாடல் காட்சிகளுக்கும் இசைஞானியும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து தரப்போகிற இசைக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் யுவன் இசையமைப்பில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்துள்ள 'கண்ணே கலைமானே' படம் இந்த மாதம் 22ம் தேதி வெளியாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜியார்ஜியா பறந்தார் மாதவன்ஜியார்ஜியா பறந்தார் மாதவன் 'சைரா' - வீர ரெட்டி ஆக ஜெகபதி பாபு 'சைரா' - வீர ரெட்டி ஆக ஜெகபதி பாபு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in