Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கந்துவட்டி கும்பல் உடன் தொடர்பா.? - கருணாகரன் மறுப்பு

11 பிப், 2019 - 17:17 IST
எழுத்தின் அளவு:
Karunakaran-denied-connection-with-Kanthu-vatti-group

பொதுநலன் கருதி படம் தொடர்பாக அதில் நடித்த கருணாகரன் மற்றும் இயக்குநர் சீயோன், தயாரிப்பாளர் இடையே மோதல் நடந்து வருகிறது. கருணாகரன் கொலை மிரட்டல் விடுவதாக சீயோனும், தயாரிப்பாளரும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். ஆனால் இதை கருணாகரன் மறுத்து வந்தார்.

இந்நிலையில் தன்னை பற்றி இவர்கள் கூறும் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து, கருணாகரன் விளக்கம் கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

பொதுநலன் கருதி பட இயக்குநர் சீயோன் மற்றும் அதன் இணை தயாரிப்பாளர் என்னை பற்றிச் சொல்லும் குற்றச்சாட்டுகள் முழுவதுமே உண்மை இல்லை. படத்தின் இசை வெளியீடு பிப்., 4ம் தேதி நடப்பதாக சொல்லி, பிப்.,1ம் தேதி இரவு 9மணக்கு அழைத்தனர். கால அவகாசம் குறைவாக இருந்ததால் முன்னதாக ஒப்புக்கொண்ட பணிகளை ஒதுக்கி வைக்க முடியவில்லை. பிப்.,8ம் தேதி தான் சென்னை வந்தேன். நான் வேண்டுமென்றே நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று குறை சொல்கிறார்கள்.

மர்ம நபர்களை வைத்து நான் தாக்க முற்பட்டதாகவும், கந்துவட்டி கும்பலை வைத்து இயக்குநரை போனில் மிரட்டியதாகவும் புகார் கொடுத்துள்ளனர். எனக்கும், கந்துவட்டி கும்பலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதில் எள்ளளவும் உண்மையில்லை. நான் அப்படி வளரவில்லை. எனது தந்தை காளிதாஸ் தேசத்தின் பாதுகாப்புக்காக உழைக்கும் மத்திய அரசின் முக்கிய துறையில் பணியாற்றி விருது பெற்றவர்.

கடனால் பாதிக்கப்பட்ட பல விவசாயிகளுக்கும், புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி செய்திருக்கும் என்னைக் கந்துவட்டிக் கும்பலுடன் தொடர்புபடுத்திப் பேசுவது வேதனை அளிக்கிறது. எனக்கும் சமூக உணர்வு இருக்கிறது. கந்துவட்டிக்காரர்களுடன் சேர்ந்து கொண்டு வன்முறையை நம்பி வாழும் தேவையில் நான் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி படம் : உறுதிப்படுத்திய சந்தோஷ் சிவன்ரஜினி படம் : உறுதிப்படுத்திய சந்தோஷ் ... யானையிலிருந்து தவறி விழுந்த ஆரவ் யானையிலிருந்து தவறி விழுந்த ஆரவ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Bhaskaran - Chennai,இந்தியா
17 பிப், 2019 - 17:50 Report Abuse
Bhaskaran இந்த அயோக்கியனைப் பற்றி சேதிகள் போட்டு அவனைபெரிய ஆளாக ஆக்கவேண்டாம்
Rate this:
12 பிப், 2019 - 08:15 Report Abuse
karthikeyan g pudichu jail ah podunga sir ivana
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
12 பிப், 2019 - 05:38 Report Abuse
 nicolethomson சீயோன் உத்தமன் >
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
11 பிப், 2019 - 19:25 Report Abuse
Bhaskaran இவன் உதைவாங்காமல் திருந்தமாட்டான் அனாவசியமாக மோடியை விஜய்யை பற்றி விமர்சனம் செய்து அதில்பெரிய ஆளாக வேண்டும் என்றுநினைத்த alpan
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Lockup
  • லாக்அப்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : வாணி போஜன்
  • இயக்குனர் :சார்லஸ்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in