Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பட டிரைலர் விமர்சனம் : ஓவியா கொந்தளிப்பு

11 பிப், 2019 - 12:31 IST
எழுத்தின் அளவு:
Dont-judge-the-movie-with-trailer

நடிகை ஓவியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள '90 எம்.எல்.' படத்தை அனிதா உதீப் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு, சிம்பு இசையமைத்துள்ளார். தணிக்கைக் குழு 'A' சான்றிதழ் வழங்கியுள்ளது. அடல்ட் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் டிரைலரை, 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும் என்ற எச்சரிக்கையுடன் படக்குழு வெளியிட்டது.

இரட்டை அர்த்த வசனங்கள், கவர்ச்சி நிறைந்த காட்சிகளும் இடம்பெற்றுள்ள இந்த டிரைலரை, தயாரிப்பாளர் தனஞ்செயன் கடுமையாக விமர்சித்தார்.

இது குறித்து டுவிட்டர் பக்கத்தில், “எனக்கு வருத்தமாகவும், கோபமாகவும் உள்ளது, பணத்துக்காக இதுபோல் இளைஞர்கள் இச்சை உணர்வைத் தூண்டும் படங்களை எடுக்கின்றனர். இதுபோன்ற மோசமான படங்கள் ஒழிய வேண்டும். இந்த டிரைலரை பார்த்து, நான் மிகவும் வருத்தமடைகிறேன்” என பதிவு செய்துள்ளார்.

இதுபோன்று பலரும் விமர்சனம் செய்ய, இதுப்பற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகை ஓவியா, “பழத்தை சுவைக்கும் முன்பே விதையை தீர்மானிக்காதீர்கள். முழுப் படத்தையும் பார்க்கும் வரை காத்திருங்கள். டிலரைப் பார்த்து முழுப் படத்தையும் தீர்மானிக்காதீர்கள்'' என்று பதிலளித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
விசாகனை கரம் பிடித்தார் சவுந்தர்யா ரஜினி : முதல்வர், கமல் வாழ்த்துவிசாகனை கரம் பிடித்தார் சவுந்தர்யா ... விஜய் ஆண்டனியும் களம் இறங்கும் அரசியல் விஜய் ஆண்டனியும் களம் இறங்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Ruban Samuel - Maldives,மாலத்தீவு
15 பிப், 2019 - 15:26 Report Abuse
Ruban Samuel இந்த மூஞ்சிய வைத்து வேறு எப்படி படம் ஏடுப்பார்கள்
Rate this:
Guna Gkrv - singapore,சிங்கப்பூர்
15 பிப், 2019 - 06:45 Report Abuse
Guna Gkrv உன்னால் இந்த சமூகம் சீரழிவது உண்மை இவ்வளவு அசிங்கமான காட்சி வைக்காமல் நல்ல கருத்து சொல்லலாம் இதில் பெண் இயக்குனர் ஏம்மா நீதான் இப்படி முத்தம் அடிக்கணுமுன்னு சொல்லி கொடுத்தியா இல்லை முத்தம் கொடுத்து காட்டினியா ஏம்மா பெண்ணாக இருந்து கொண்டு இவ்வளவு கேவலமான படம் கொடுத்த உங்களுக்கு பிட் பட ரேஞ்சுக்கு எடுத்து இருக்கிறீர்கள்.
Rate this:
Bhagat Singh Dasan - Chennai,இந்தியா
13 பிப், 2019 - 15:47 Report Abuse
Bhagat Singh Dasan அதிகபட்சமாக படத்தில் என்ன சொல்லியிருப்பீர்கள், இப்படி எல்லாம் கேடுகெட்ட சுத்திய ஒரு பெண் இறுதியில் வாழ்க்கையை புரிந்துகொண்டு திருந்துவது போல இருக்கும், கேடுகெட்ட காட்சியை ஏற்கும் ரசிகர்கள் அவள் திருந்துவதை ஏற்பதில்லை. மொத்தத்தில் சினிமா கலாச்சார சீரழிவு
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
12 பிப், 2019 - 15:51 Report Abuse
Vasudevan Srinivasan இதில் ஆச்சரியம் என்னவென்றால் படத்தின் இயக்குனர் 'பெண்' என்கிறார்கள் 'நம்புவோம்..'
Rate this:
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
12 பிப், 2019 - 06:48 Report Abuse
Subramanian Arunachalam ஆபாச களஞ்சியமாக படத்தை எடுத்துவிட்டு ஒரு அறிவுரை வேறு . இதில் தந்திரமாக படத்தின் வசூலுக்காக , படத்தை பார்த்த பின்பு கருத்து கூறுங்கள் என்றும் சொல்கிறார் . படத்தை பார்த்த பின்பு ஆபாச களஞ்சியம் என்று கூறினால் பணத்தை திருப்பி தருவாரா
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in