Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விசாகனை கரம் பிடித்தார் சவுந்தர்யா ரஜினி : முதல்வர், கமல் வாழ்த்து

11 பிப், 2019 - 10:47 IST
எழுத்தின் அளவு:

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யா. இவர் தொழிலதிபர் விசாகனை இன்று(பிப்.,11) கரம் பிடித்தார். சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாய் நடந்த திருமணத்தில் இருவீட்டாரது குடும்ப உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கடம்பூர் ராஜூ, நடிகரும், மக்கள் நீதி மைய தலைவருமான கமல்ஹாசன், திமுக., தலைவர் ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசு, நக்கீரன் கோபால், முக.அழகிரி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, அவரது மகள் லட்சுமி மஞ்சு, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன், ராகவா லாரன்ஸ், பிரபு குடும்பத்தார், செல்வராகவன், எஸ்.ஏ.சந்திரசேகர் இவரது மனைவி ஷோபா, சதீஷ், மணிரத்னம், சுஹாசினி, கே.எஸ்.ரவிக்குமார், குஷ்பு, அதிதி ராவ், பார்த்திபன், அனிருத், ஏவிஎம் சரவணன், பி.வாசு, கஸ்தூரி ராஜா, மதன் கார்கி, எஸ்.பி.முத்துராமன், தாணு உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் மணமக்களை வாழ்த்தினர். இன்று இரவு வரவேற்பு நிகழ்வும் நடக்கிறது.

முன்னதாக கடந்த மூன்று தினங்களாக திருமணம் தொடர்பான சடங்குகள் வெகு விமரிசையாக நடந்தது. ரஜினி நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகின. தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர் சமூக வலைதளங்களிலும் மணமக்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

திருமணத்திற்கு முன்னதாக டுவிட்டரில் நேற்று பதிவிட்ட சவுந்தர்யா, என் வாழ்வில் முக்கியமான மூன்று ஆண்கள் என்று குறிப்பிட்டு தனது தந்தை, மகன் மற்றும் விசாகனை கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (22) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி, விஜயகாந்த்திற்கு வில்லனாக நடித்தவர் மரணம்ரஜினி, விஜயகாந்த்திற்கு வில்லனாக ... பட டிரைலர் விமர்சனம் : ஓவியா கொந்தளிப்பு பட டிரைலர் விமர்சனம் : ஓவியா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (22)

Senthamizhsudar - Chennai,இந்தியா
12 பிப், 2019 - 16:11 Report Abuse
Senthamizhsudar இது போன்ற இரண்டாம் திருமணங்களை இப்படி பிரபலமானவர்கள் பிரபல படுத்துவது சமுதாயத்தின் நடுத்தர பிர்படுத்தபட்ட மக்களை பாதிக்கும். சினிமா டிரன்டிங் போல சில நல்ல உள்ளங்களின் பெண்களின் வாழ்கை பாதிக்கும்.
Rate this:
S Ramkumar - Tiruvarur,இந்தியா
12 பிப், 2019 - 11:06 Report Abuse
S Ramkumar இவரோடயாவது நல்ல குடும்பம் நடத்துமா.
Rate this:
manis - doha,கத்தார்
12 பிப், 2019 - 09:42 Report Abuse
manis அய்யய்யயோ வைகோவும் வந்தாப்ல போல
Rate this:
manis - doha,கத்தார்
12 பிப், 2019 - 09:38 Report Abuse
manis இனிமேலாவது பிடித்த கரத்தை விடாது நல்வாழ்வு வாழ வேண்டும் ... அந்த குழந்தைக்காகவாது ...
Rate this:
Sivaligam - Chennai,இந்தியா
12 பிப், 2019 - 09:05 Report Abuse
Sivaligam இது ஒரு newsnu, you are posting it in main page. Please improve.
Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in