Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடுத்தடுத்து அதிர்ச்சி தந்த 2 வீடியோக்கள்

10 பிப், 2019 - 12:33 IST
எழுத்தின் அளவு:
priya-warior,-oviya-liplock-vidoes-make-shock-their-fans

யு டியூப் வீடியோ இணையதள வளர்ச்சிக்குப் பிறகு வீட்டில் உள்ள சிறுவர், சிறுமியர் கூட மிக எளிதாக வீடியோக்களைப் பார்க்கும் வசதி ஏற்பட்டுள்ளது. இதனால், ஒரு கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது. அனைத்தையும் பெற்றோர்கள் கண்காணிப்பது சிரமமான விஷயமும் கூட.

டிஜிட்டல் வளர்ச்சி இன்றைய தலைமுறையினரை வெகுவாகப் பாதித்து வருவது அனைவரையும் கவலைக்குள்ளாக்கி உள்ளது. அதற்கேற்றபடி சமீப காலமாக வரும் சில திரைப்படங்கள் ஆபாசத்தை எந்த வரைமுறையும் இல்லாமல் வெளிப்படுத்தி வருகின்றன. யு டியூபில் வெளியிடப்படும் வீடியோக்களுக்கு சென்சார் இல்லை என்பது பலருக்கும் வசதியாகப் போய்விட்டது.


இரு தினங்களுக்கு முன்பு 'ஒரு அடார் லவ்' படத்தின் ஒரு காட்சி வீடியோ வெளியிடப்பட்டது. அதில் நாயகி பிரியா பிரகாஷ் வாரியரை நாயகன் ரோஷன் உதட்டோடு உதடு வைத்து முத்தமிடும் காட்சி இடம் பெற்றது. நேற்று வெளியான ஓவியா நடித்துள்ள '90 எம்எல்' பட டிரைலரில் முத்தக் காட்சிகள் மட்டுமல்லாது, படுக்கையறை காட்சிகள், ஆபாச வசனங்கள் இடம் பெற்று பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.


அடுத்தடுத்து இரண்டு வீடியோக்களிலும் அதிர்ச்சியைக் கொடுத்த ஹீரோயின்கள் பிரியா பிரகாஷ், ஓவியா இருவரும் சமீப காலங்களில் அனைத்து ரசிகர்களையும் அவர்களது சுட்டித்தனமான செயல்களால் கவர்ந்தவர்கள்.


பிரியாவின் குழந்தைத்தனமான கண் சிமிட்டல் வீடியோவை பலரும் ரசித்தார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவின் வெளிப்படைத்தன்மையான செயல் பலரையும் கவர்ந்தது. அப்படிப்பட்ட இருவரும் வெளிப்படையான ஆபாசக் காட்சிப்படுத்தல் வீடியோக்களால் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
இரண்டு 18 கோடிப் பாடலில் சாய் பல்லவிஇரண்டு 18 கோடிப் பாடலில் சாய் பல்லவி தீர்ப்புகள் விற்கப்படும்: சர்ச்சைக்குரிய தலைப்புதான்: இயக்குனர் விளக்கம் தீர்ப்புகள் விற்கப்படும்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

10 பிப், 2019 - 20:28 Report Abuse
கதை சொல்லி இப்பவும் வெளிப்படையாகத் தானே நடித்திருக்கிறார். அன்று பாராட்டியதை போன்று இன்றும் இளைய தலைமுறை பாராட்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in