Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நீயா 2 புரமோஷன்... ஜெய் மறுப்பு

09 பிப், 2019 - 14:34 IST
எழுத்தின் அளவு:
Jai-denied-to-participate-in-Neeya-2-promotion

ஜெய் நடித்த படங்கள் எதுவும் அண்மைக்காலமாக கமர்ஷியலாக வெற்றியடையவில்லை. சில வருடங்களுக்கு முன் எத்தன் படத்தை இயக்கிய சுரேஷ் இப்போது இயக்கி வரும் 'நீயா-2' படத்தில் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ராய் லட்சுமி, கேத்ரின் தெரெசா, வரலட்சுமி சரத்குமார் என மூன்று கதாநாயகிகள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது.

சந்தானம் நடித்து சமீபத்தில் வெளியான தில்லுக்கு துட்டு-2 படத்துக்கு இசையமைத்த சபீர் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். கமல் நடிப்பில் வெளியான 'நீயா' படம் போலவே இந்தப் படமும் தன் இணையை கொன்றவர்களை பழிவாங்கும் பாம்பு பற்றிய கதைதான்.

ஆனால் கதை உரிமை இன்னும் பிற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இது 'நீயா' படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என்று தயாரிப்பு தரப்பு சொல்லிக்கொண்டிருக்கிறது!

இது ஒரு பக்கம் இருக்க, நீயா 2 படத்தை விரைவில் வெளியிட முடிவு செய்துள்ள தயாரிப்பாளர் கதாநாயகன் ஜெய்யை படத்தின் புரமோஷனுக்கு அழைத்திருக்கிறார். ஜெய்யோ வழக்கம் போல வர முடியாது என்று கூல்லாக சொல்லிவிட்டாராம். எனவே 3 கதாநாயகிகளை அழைத்து நீயா 2 படத்தின் புரமோஷன்களை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தடம் தாமதம் ஏன்? இயக்குனர் விளக்கம்தடம் தாமதம் ஏன்? இயக்குனர் விளக்கம் வர்மா படம் இயக்கம் : 96 இயக்குநரும் முயற்சி வர்மா படம் இயக்கம் : 96 இயக்குநரும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

சத்தி வேல், நோர்வே நல்லா வேணும், எத்தனையோபேர் இருக்க இவனை ஏன் நடிக்கவைக்கிறீரகள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in