Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒட்டகம்-பாசம்-போராட்டம்: வேகமாக உருவாகும் பக்ரீத்

09 பிப், 2019 - 11:38 IST
எழுத்தின் அளவு:
story-of-bakrid-movie

சிகை படத்தை இயக்கியதன் மூலம் விருதுகளை பெற்றிருக்கும் இயக்குநர் ஜெகதீசன் சுபு. அடுத்ததாக, முதன் முதலில் ஒட்டகத்தை நடிக்க வைத்து, ஒரு படத்தை இயக்கி வருகிறார். பக்ரீத் என பெயரிடப்பட்டிருக்கும் அந்தப் படத்தில் நடிகர் விக்ராந்த்துடன், வசுந்தரா, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். எம்.எஸ்.சுப்புராஜ் தயாரிக்கும் பக்ரீத் படத்தை, ஜெகதீசன் சுபுவே ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைக்கும் பொறுப்பு டி.இமானிடம் வழங்கப்பட்டிருக்கிறது.

படத்தில், விக்ராந்த், ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் கால சூழ்நிலையால், தன்னுடைய ஜீவனத்துக்காக பிழைப்பை மாற்ற வேண்டியதாகிறது. அந்த சமயத்தில்தான் அவர், ஒரு ஒட்டகத்தை விலைக்கு வாங்கி வருகிறார். ஒட்டகம், அவரது குடும்பத்தாரோடு நன்கு பழகி விடுகிறது. மனைவி, குழந்தை என எல்லோருமே சரா என அழைக்கப்படும் ஒட்டகத்தோடு ஒன்றிப் பழகி விடுகின்றனர். ஆனாலும், சூழ்நிலை, ஒட்டகத்துக்கு ஒத்துவரவில்லை. அதுவே குடும்பத்தினருக்கு பெரும் போராட்டமாகி விடுகிறது.


ஒரு கட்டத்தில், இயற்கையோடு போராடும் ஒட்டகத்தை, அதன் வாழ்க்கைக்கு ஏற்ற இடமான ராஜஸ்தானில் கொண்டு போய் விட்டு விட்டு வருமாறு, கதாநாயகன் விக்ராந்தை நெருக்குகிறார் அப்பா எம்.எஸ்.பாஸ்கர். வேறு வழியின்றி, ஒட்டகத்தின் மேல் வைத்திருக்கும் பரிவு-பாசத்தால், பிரியவே மனமில்லாத குடும்பத்திலிருந்து ஒட்டகத்தை தனித்து எடுத்து, ராஜஸ்தானுக்கு கொண்டு செல்கிறார் விக்ராந்த். ராஜஸ்தான் போவதற்குள் போலீஸ், டோல், பத்திரிகையாளர்கள், மிருக ஆர்வலர்கள் என பலரிடமும் சிக்கித் தவிக்கிறார் விக்ராந்த். ஒரு வழியாக, மிகுந்த போராட்டத்துக்குப் பின், ஒட்டகத்தை அதன் இடத்துக்குக் கொண்டு சேர்க்கிறார் விக்ராந்த். இடையில், ஒட்டகத்தை பிரிந்து தவிக்கும் குடும்பத்தின் பாசப் போராட்டம் வேறு. இப்படி ஒட்டகத்தை வைத்து ஒரு கதை பண்ணி, அதை படமாக்கி வருகிறார் ஜெகதீசன் சுபு. இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. வரும், மே மாதம் படம் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
படமாகிறது நசிந்து வரும் பெட்டிக்கடைகள்படமாகிறது நசிந்து வரும் ... அரசியலோடு, சினிமா பணியும் தொய்வில்லாமல் நடக்கும் : கமல் அரசியலோடு, சினிமா பணியும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in