"மிஸ்டர் காப்ளர்" - சாதனை குறும்படத்திற்கு விருது வழங்கி கவுரவம் | கனியை வீட்டுக்கும் சென்று பாராட்டிய சிம்பு | பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு கார் பரிசளித்த சமந்தா | ஷங்கர் படத்தில் விஜய்சேதுபதி? | கொரோனாவிலிருந்து மீண்டு ரன்பீருடன் மாலத்தீவு பறந்த ஆலியா பட் | எம்.ஜி.ஆர்.மகன் ரிலீஸ் தள்ளி வைப்பு | படக் குழுவினருக்கு கொரோனா: கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு நிறுத்தம் | விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணம் என அவதூறு: மன்சூரலிகான் மீது போலீசில் புகார் | வெற்றி நடிக்கும் ரோட் மிஸ்ட்ரி படம் | சித்திரம் பேசுதடி: புதிய தொடர் |
பெட்டிக் கடைகள் இல்லாத கிராமங்களையும் பார்க்க முடியாது; நகரங்களையும் பார்க்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு, வாழ்க்கையின் முக்கியமான அங்கமாக பெட்டிக் கடை இருக்கிறது. ஆனால், சூப்பர் மார்க்கெட், ஆன்-லைன் வர்த்தகம் என்று ஆன பின், பெட்டிக்கடைகளின் நிலைமை ரொம்பவும் மோசமாகி வருகிறது. இதுதான் கதை. இதை அடிநாதமாக வைத்து, மூன்று மணி நேரத்துக்கு ஒரு கதை பண்ணி இருக்கிறார் இயக்குநர் இசக்கி கார்வண்ணன்.
அவர் எடுத்துவரும் படத்துக்கு, 'பெட்டிக்கடை' என பெயர் சூட்டி இருக்கிறார். இந்தப் படத்தில், குணச்சித்திர நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். வீரா, வர்ஷினி, சாந்தினி, சுந்தர் என பெரும் நடிகர்-நடிகையர் பட்டாளம் நடித்திருக்கும் இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. படத்தின் பெயரான 'பெட்டிக்கடை'க்கு கீழே 'ஜி.எஸ்.டி., இல்லாத பெட்டிக்கடை' என வாசகம் எழுதப்பட்டிருக்கிறது. இதென்ன வாசகம் என்று கேட்டால், 'பெட்டிக்கடைகள் ஏற்கனவே ஆன்-லைன் வர்த்தகம், சூப்பர் மார்க்கெட் கலாசாரத்தால் பாதிக்கப்பட்டிருக்க, ஜி.எஸ்.டி., வரிவிதிப்பும் வந்து, மொத்த பெட்டிக்கடைகளின் வாழ்க்கையிலும் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு விட்டது. இதைத்தான் ஜி.எஸ்.டி., இல்லாத பெட்டிக்கடை' என வாசகமாக எழுதி இருக்கிறோம் என கூறுகிறது படக் குழு.