மிஸ்டர் லோக்கல் டீசர் வெளியீடு | பெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு | ஆகஸ்டில் வெளியாகும் அஜீத்தின் பிங்க் ரீமேக்? | அனுராக் காஷ்யப் இயக்கும் படத்தில் ஷாலினி பாண்டே | அதர்வா பட பாடலை வெளியிட்ட தனுஷ் | ஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல: சாயிஷாவின் அம்மா | 'கென்னடி கிளப்' படம்; கபடிதான் கதைக் களம் | காதலர் படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி | குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன்? | சீரியலிலும் லிப்லாக் முத்தக்காட்சி வந்தாச்சு |
தெலுங்கில் விஜய தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் அர்ஜூன் ரெட்டி. விக்ரமின் மகன் துருவ் நடிப்பில் பாலா இயக்கத்தில், வர்மா என்ற பெயரில் ரீமேக் ஆனது. இ4 எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்தது.
படப்பிடிப்பு முடிந்து பிப்ரவரி 14-ந்தேதி படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வர்மா படம் திருப்தியாக இல்லை என்று சொல்லி அப்படத்தை தயாரித்த இ4 எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வர்மா வெளிவராது. மீண்டும் புதிதாக படப்பிடிப்பு நடத்தப்படும், துருவ் ஹீரோவாக நடிக்க வேறு ஒருவர் இயக்குவார் என கூறப்பட்டது.
இந்நிலையில் இப்படியொரு சம்பவம் நடந்தது தனக்கு தெரியாது என வருத்தப்படுகிறார் நாயகி மேகா சவுத்ரி. அதுவும் நேற்று(பிப்.,7) அவருக்கு பிறந்தநாள், பிறந்தநாள் அன்று இப்படியொரு அதிர்ச்சியான செய்தி வருமென்று நினைக்கவே இல்லை என்று தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார் மேகா.