சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
ஒரு திரைப்படத்திற்கு தியேட்டர்களில் திரையிடப்பட்டு வசூல் செய்யும் சாதனை மிகப் பெரும் விஷயம். ஆனால், சில படங்கள் தியேட்டர்களில் பெரும் வரவேற்பைவிட டிவியில் ஒளிபரப்பாகும் போது அதிக வரவேற்பைப் பெறும். தியேட்டர்களில் ஓடாத படங்கள் கூட டிவியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பைப் பெற்று ஏன் இந்தப் படம் தியேட்டர்களில் ஓடவில்லை என்ற கேள்வியை எழுப்பும்.
கடந்த சில வருடங்களில் வெளிவந்த சில தமிழ்ப் படங்கள் டிவி ஒளிபரப்பில் அதிகப்படியான புள்ளிகளைப் பெற்று தனி சாதனை படைத்தன. விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்த 'பிச்சைக்காரன்' படம் டிவி ஒளிபரப்பில் 1,76,96,000 தடப் புள்ளிகள் பெற்று இதுவரை முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இரண்டாவது இடத்தில் தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்ட படமான 'பாகுபலி 2', 1,70,70,000 தடப் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், சிவகார்த்திகேயன் நடித்த 'சீமராஜா' படம் 1,67,66,000 தடப் புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்திலும் இருந்தது.
இப்போது 'சர்கார்' படம் 'சீமராஜா' படத்தை சிறிதளவில் முந்தி 1,69,06,000 தடப் புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. 'சர்கார்' படத்தால், 'பிச்சைக்காரன், பாகுபலி 2' ஆகிய படங்களின் புள்ளிகளை முந்த முடியவில்லை. 'சர்கார்' படம் டிவி ஒளிபரப்பிலும் முதலிடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மூன்றாம் இடத்தை மட்டுமே பிடித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.
தமிழ்ப் படங்களில் 'பிச்சைக்காரன்' தொடர்ந்து அதன் முதலிட சாதனையை இழக்காமல் இருந்து வருகிறது.