Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வர்மா டிராப்... பாலாவின் பதில் என்ன?

08 பிப், 2019 - 10:56 IST
எழுத்தின் அளவு:
What-is-reaction-of-Bala-after-Varma-drop.?

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ், மேகா சவுத்ரி இணைந்து நடித்த படம் 'வர்மா'. 'அர்ஜுன் ரெட்டி' தெலுங்குப்படத்தின் ரீ-மேக்காக உருவான இந்தப் படத்தின் டீஸர், பாடல்கள் சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து வர்மா படம் பிப்ரவரி 14 அன்று வெளியாகும் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தை தயாரித்திருக்கும் 'E4 ENTERTAINEMENT' படநிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீ-மேக்காக உருவாகியுள்ள 'வர்மா' படம் எங்களுக்கு திருப்தியாக அமையவில்லை. அதனால் பாலா இயக்கிய 'வர்மா' படத்தை தூக்கிப்போட்டுவிட்டு, வேறு இயக்குநரை வைத்து புதிதாக ஒரு படத்தை எடுக்க இருக்கிறோம் என்று அறிவித்துள்ளனர்.

இயக்குநர் மட்டுமின்றி கதாநாயகி உட்பட புதிய தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் குறித்த விவரங்களை மிக விரைவில் அறிவிக்க உள்ளனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்கி ஜூன் அல்லது ஜூலை மாதம் 'வர்மா' வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாலா இயக்கத்தில் உருவான 'வர்மா' திரைக்கு வாரது. இதனால் பாலாவுக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பாலாவின் பதில் என்ன?

ரீமேக் படம் எடுப்பதில் உடன்பாடில்லாத பாலாவை, தன் மகனுக்காக விக்ரம் தான் சம்மதிக்க வைத்தார் என படம் துவங்கும்போதே விமர்சனங்கள் எழுந்தன. பாலாவும் சம்மதித்து அப்படியே ரீமேக் பண்ண மாட்டேன் என் பாணியில்தான் எடுப்பேன் என்று சொல்லித்தான் வர்மா படத்தை எடுத்தார். அப்போது சரி என்றவர்கள் இப்போது தயாரிப்பாளர் உடன் சேர்ந்து கொண்டு விக்ரமும் தன்னை அவமானப்படுத்திவிட்டார் என்று பாலா கடும் அதிருப்தியிலும், கோபத்திலும் உள்ளாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மார்ச் 1-ஆம் தேதி 'பூமராங்'ரிலீஸ்மார்ச் 1-ஆம் தேதி 'பூமராங்'ரிலீஸ் தீர்ப்புகள் விற்கப்படும் : சர்ச்சைக்குரிய தலைப்பு தீர்ப்புகள் விற்கப்படும் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in