Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தில்லுக்கு துட்டு 2 : சந்தானத்திற்கு தருமா ஹிட்டு

07 பிப், 2019 - 12:02 IST
எழுத்தின் அளவு:
Dhilluku-dhuddu-2-will-give-hit-to-Santhanam

நம்பர் 1 காமெடி நடிகராக திகழ்ந்த சந்தானம், திடீரென ஹீரோவாக மாறினார். அவர், ஹீரோவாக நடித்த இரண்டு படங்கள் மட்டுமே வெற்றியை தந்தன. மற்ற படங்கள் தோல்வியை தழுவின. மேலும் அவர் நடித்த இரண்டு படங்கள் இன்னும் வெளிவராமல் முடங்கி கிடக்கின்றன.

இந்நிலையில், தில்லுக்கு துட்டு கொடுத்த வெற்றியால், அதன் இரண்டாம் பாகத்தை தயாரித்தார் சந்தானம். முதல்பாகத்தை போலவே காமெடி, த்ரில் படமான 'தில்லுக்கு துட்டு 2', இன்று(பிப்., 7) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

'தில்லுக்கு துட்டு' முதல் பாகத்தை இயக்கிய ராம்பாலாவே இயக்கியுள்ளார். ஷபிர் இசையமைத்துள்ளார். தீபக்குமார் ஒளிப்பதிவும், மாதவன் மது படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

முன்னதாக இந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகளின் கேரக்டர்கள் குறித்த தகவல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்தில், 'வெள்ளை விஜி' என்ற கேரக்டரில் சந்தானம், 'மாயா' என்ற கேரக்டரில் ஷிரிதா ஷிவதாஸ், 'மொட்டை' என்ற கேரக்டரில் மொட்டை ராஜேந்திரன், 'ஷகிரமா தேவி' என்ற கேரக்டரில் ஊர்வசியும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் வெற்றியை ரொம்பவே எதிர்பார்த்து காத்திருக்கும் சந்தானத்துக்கு, படம் வெற்றியடைந்தால் மட்டுமே, கதாநாயகனாக தொடர்ந்து நீடிக்க முடியும் என்கிறது சினிமா உலகம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
உதயா ஜோடி ஆனார் டப்மாஸ் மிருனாளினிஉதயா ஜோடி ஆனார் டப்மாஸ் மிருனாளினி இளம் வயதிலேயே தொழில் அதிபரான குஷ்பு மகள் இளம் வயதிலேயே தொழில் அதிபரான குஷ்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in