Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் படத்தை விமர்சகர்கள் புரிந்து கொள்ளவில்லை: ராம்

06 பிப், 2019 - 15:00 IST
எழுத்தின் அளவு:
Reviewer-did-not-understand-my-film-says-Director-Ram

இயக்குனர் ராம் இயக்கிய, பேரன்பு படம் சமீபத்தில் வெளிவந்தது. படம் குறித்து பாசிட்டிவான விமர்சனங்கள் வெளிவந்தது. ஓரளவுக்கு மக்கள் வரவேற்பும் கிடைத்துள்ளது. இந்த நிலையில் தன் படத்தை விமர்சகர்கள் புரிந்து கொள்வதை விட மக்கள் தான் அதிகமாக புரிந்து கொள்கிறார்கள் என்று ராம் பேசி உள்ளார்.

பேரன்பு படக்குழுவினருக்கு இயக்குனர் பா.ரஞ்சித் நடத்தி வரும் கூகை திரைப்பட இயக்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் இயக்குநர்கள் ராம், பா.ரஞ்சித், லெனின் பாரதி, மீரா கதிரவன், ஸ்ரீ கணேஷ், தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், அஞ்சலி அமீர், “தங்கமீன்கள்” சாதனா, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், எழுத்தாளர்கள் ஷாலின் மரியா லாரன்ஸ், ஜா.தீபா, சமூக செயற்பாட்டாளர்கள் மாலினி ஜீவரத்தினம், கிரேஸ் பானு ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் இயக்குனர் ராம் நன்றி தெரிவித்து பேசியதாவது:

பேரன்பு திரைப்படத்தை ஒரு மாற்று சினிமாவாக நினைத்து எடுக்கவில்லை. அதனை ஒரு "மெயின்ஸ்ட்ரீம்" சினிமாவாகத் தான் எடுத்தேன். நான் மட்டுமல்ல, இப்படத்தின் தயாரிப்பாளரும் அப்படி நினைத்துதான் தயாரித்தார். நல்ல படங்களை மக்கள் கைவிட மாட்டார்கள் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி இருக்கிறது.

பேரன்பு திரைப்படத்தை கொண்டாடுவதற்காக என்னுடைய மற்ற மூன்று படங்களுடன் ஒப்பிடுவதை நான் விரும்பவில்லை. கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி ஆகிய மூன்றும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாதவை. கேரளாவில் கொச்சி நகரில் 1200 சீட்டுகள் வசதி கொண்ட ஈவிஎம் கவிதா திரையரங்கில் பல வருடங்களுக்குப்பின் பேரன்பு மூலம் ஹவுஸ்புல் போர்டு வைத்திருக்கிறார்கள். அதேப்போல கோயம்புத்தூரில் நான் சென்ற இடங்களில் எல்லாம் படத்தை மக்கள் கொண்டாடுகிறார்கள்.

கற்றது தமிழ் படம் முதலாகவே விமர்சகர்கள் என் படங்களை புரிந்து கொள்வதை விட, மக்கள் நன்றாகவே புரிந்து கொள்கிறார்கள். எல்லோரும் ராம் பத்து வருடத்தில் நான்கு படங்களை மட்டுமே எடுத்து கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதாக பேசுகிறார்கள், உண்மையில் நான் கஷ்டப்படவே இல்லை. நான் பிறக்கும் போது எப்படி இருந்தேனோ அப்படியே தான் இப்போதும் இருக்கிறேன்.

சினிமாவிற்காக நான் எதையுமே இழக்கவில்லை. என் மகிழ்ச்சியை, என் கொண்டாட்டத்தை இழக்காமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கேரளாவில் "பேரன்பு" திரைப்படத்தைப் பற்றி பெரிதாக பேசுகிறார்கள் என்றால், அங்கு மெகா ஸ்டார் மம்முட்டி இருக்கிறார். அவரால் படம் குறித்த தகவல் வேகமாக பரவுகிறது, மக்கள் வருகிறார்கள். அதேபோன்று இங்கும் மக்கள் படத்தை பார்த்தால் என் தயாரிப்பாளர் மகிழ்ச்சி அடைவார். என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
46 ஆண்டுகளுக்கு பிறகு காசியாத்திரை 2 தயாராகிறது46 ஆண்டுகளுக்கு பிறகு காசியாத்திரை 2 ... விஜய் 63 : தென்னிந்திய சினிமாவில் முதல்முறை : ரஹ்மான் விஜய் 63 : தென்னிந்திய சினிமாவில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
07 பிப், 2019 - 08:49 Report Abuse
Enrum anbudan எளிமை என்றால் ட்ரிம் செய்யாத தாடியுடனும், கேவலமான கசங்கிய சட்டையுமா? ரொம்ப அசிங்கமாக இருக்கின்றது. கொஞ்சம் மாறுங்கள் வெளி வேஷம் வேண்டாம் ராம் மற்றும் ரஞ்சித்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in