சுரேஷ்கோபி நடிக்கும் ஹைவே 2 : 27 வருடம் கழித்து 2ம் பாகம் | 25 வருடங்களை நிறைவு செய்த 'சூர்ய வம்சம்' | 30 வருடங்களை நிறைவு செய்த 'அண்ணாமலை' | மதுரையில் களைகட்டியது இளையராஜா இசை நிகழ்ச்சி | இயக்குனர் டிகே இயக்கும் அடுத்த படத்தில் கதா நாயகியாக ஸ்ருதிஹாசன் | விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் கிரித்தி ஷெட்டி | ரசிகர்களை அதிரவிட்ட ஷிவானியின் கிளாமர் போட்டோக்கள் | கார்த்தி - விஜய் சேதுபதி இணையும் படத்தின் டைட்டில் ஜப்பான்? | துல்கர் சல்மானின் சீதாராமம் படத்தின் டீசர் வெளியானது | 32 ஆண்டுகள் கழித்து முதல் ஹீரோவுடன் மீண்டும் இணையும் மீனா |
தமிழ் சினிமா உலகில் ஒவ்வொருவரும் அவர்களுக்கென்று ஒரு இமேஜை வைத்துக் கொள்வார்கள். அந்த இமேஜ் வளையத்தை விட்டு அவ்வளவு சீக்கிரத்தில் வெளியில் வரமாட்டார்கள்.
தான் நாயகனாக அறிமுகமான முதல் படமான 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்திலேயே அப்போது முன்னணி நடிகையாக இருந்த ஹன்சிகாவை தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தவர் உதயநிதி ஸ்டாலின். அதன் பின் 'இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா' ஆகிய படங்களில் அவர் ஜோடியாக நயன்தாரா நடித்தார். 'கெத்து' படத்தில் எமி ஜாக்சன் ஜோடியாக நடித்தார். 'மனிதன்' படத்தில் மீண்டும் ஹன்சிகா நடித்தார்.
அதற்குப் பின் முன்னணி நடிகைகள் இல்லாமல் வளரும் நடிகைகள், ஓரிரு படங்களில் நடித்த நடிகைகள் என உதயநிதி ஜோடி சேர்ந்து நடிப்பது ஆச்சரியமாக உள்ளது. 'சரவணன் இருக்க பயமேன்' படத்தில் ரெஜினா, சிருஷ்டி டாங்கே நடித்தார்கள். 'பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தில் நிவேதா பெத்துராஜ் நடித்தார். 'இப்படை வெல்லும்' படத்தில் மஞ்சிமா மோகன், 'நிமிர்' படத்தில் நமீதா பிரமோட், பார்வதி நாயர் நடித்தனர்.
நான்கைந்து படங்களுக்குப் பிறகு முன்னணி நடிகையான தமன்னாவுடன் 'கண்ணே கலைமானே' படத்தில் நடித்துள்ளார். இப்போது மீண்டும் புது நடிகைகளுடன் அவர் ஜோடி சேர ஆரம்பித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் நாயகனாக நடித்து வரும் 'சைக்கோ' படத்தில் அதிதி ராவ் ஹைதரி, நித்யா மேனன் நடிக்கிறார்கள். இவர்கள் இருவரும் தமிழில் முன்னணி நடிகைகளாக இல்லை. நேற்று ஆரம்பமான 'கண்ணை நம்பாதே' படத்தில் ஆத்மிகா நாயகியாக நடிக்கிறார்.
உதயநிதியின் இந்த திடீர் மாற்றத்திற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்கிறார்கள் கோலிவுட்டில்.