Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'96' டீமை மகிழ வைத்த 'வித்தியாச' பார்த்திபன்!

06 பிப், 2019 - 08:16 IST
எழுத்தின் அளவு:
Parthiban-gift-to-96-team

எதையும் வித்தியாசமாக செய்து பழக்கப்பட்டவர் நடிகரும்; இயக்குனருமான பார்த்திபன். அவருடைய செய்கைகள் அனைத்திலும் கொஞ்சம் அழகுணர்ச்சியும்; கவிதைத்தனமும் இருக்கும்.

எந்த சினிமா விழாவாக இருந்தாலும், அவருடைய பேச்சிலும் ஒரு தனித்துவம் இருக்கும். அந்த வகையில், '96' படத்தின் 100வது நாள் விழாவில், பார்த்திபன் பேச்சு அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக, விஜய் சேதுபதியையும் த்ரிஷாவையும் மேடைக்கு அழைத்து, இந்த படத்தின் வித்தியாசமான 'க்ளைமாக்ஸ்' காட்சி இதுதான் என்று சொல்லி, இருவரையும் கட்டிப்பிடிக்க வைத்தார்.

இந்நிலையில், '96' படக் குழுவினர்களுக்கு ஒரு வித்தியாசமான பரிசையும் அவர் வழங்கியுள்ளார். '96' படத்தை குறிக்கும் வகையில் 9 மற்றும் 6 எண்களை மட்டுமே கொண்ட ஒரு கடிகாரத்தில், 'காதலுடன் உங்கள் பார்த்திபன்' என்று எழுதி படக் குழுவினர்களுக்கு வழங்கியுள்ளார்.

இந்த பரிசு குறித்து பார்த்திபன், சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது : இயற்கையாக சினிமாவை காதலிப்பவன் என்பதால்.... 'ஊரார் வெற்றியை ஊக்கி வளர்த்தால், தன் படம் தானாய் வளரும்' என்பதால், என் செலவில் ஒரு கேடயம் வழங்கினேன்- '96'.

இவ்வாறு அவர் பதிவில் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அசுரனில் இணையும் பிரபல இயக்குனர்அசுரனில் இணையும் பிரபல இயக்குனர் மலையாளத்துக்கு முன் இரு தமிழ் படங்கள்: நயன் குஷி மலையாளத்துக்கு முன் இரு தமிழ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
12 பிப், 2019 - 14:46 Report Abuse
Vasudevan Srinivasan நான் 96 படம் பார்க்கவில்லை ஆனால் பார்க்க விரும்பி தவற விட்டுவிட்டேன்.. திரு. பாக்யராஜ் அவர்களின் 'அந்த ஏழு நாட்கள்' படத்தின் க்ளைமேக்ஸ் குறித்து நீங்கள் சிலாகித்திருப்பது புரிகிறது அது அந்தக்காலம் அதாவது 'தாலி' சென்டிமெண்ட்டுக்கு மதிப்பு கொடுத்த காலம்.. ஆனால் இன்று 'அலைபாயுதே' 'ஓகே கண்மணி' போன்ற 'லிவிங் டு கெதர்' கருமாந்தரமெல்லாம் வெற்றி பெரும் காலம்..
Rate this:
Narayanan Kutty - tirupur,இந்தியா
12 பிப், 2019 - 10:17 Report Abuse
Narayanan Kutty 96 படத்தின் ஒரிஜினலிடியையே கெடுத்துவிட்டார். இதுதான் அந்த 7 நாட்கள் பாக்கியராஜுக்கும் பார்த்திபனுக்கும் உள்ள வித்தியாசம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in