Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

சிபிஐ 5ஆம் பாகத்திற்காக உயிரை பிடித்து வைத்திருக்கும் கதாசிரியர்

05 பிப், 2019 - 15:53 IST
எழுத்தின் அளவு:
SN-Swamy-waits-for-CBI-5

மலையாள சினிமாவில் மம்முட்டி வளர்ந்து வந்த காலத்தில் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்த படம் தான் ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு. சொல்லப்போனால் இந்த படம்தான் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் மம்முட்டியை கொண்டு சேர்த்தது. 1988-ல் வெளியான இந்த படத்தை தொடர்ந்து சீரான இடைவெளிகளில் இதன் அடுத்தடுத்த பாகங்கள் ஜகார்த்தா, சேதுராம ஐயர் சிபிஐ, நேர் அறியான் சிபிஐ என மொத்தம் நான்கு பாகங்கள் இந்த முப்பது வருடங்களில் வெளியாகியுள்ளன.

இந்த நான்கு படங்களுக்கும் கதை எழுதிய கதாசிரியர் எஸ்.என்.சுவாமி என்பவர்தான், இதன் ஐந்தாம் பாகத்திற்கும் கதை எழுதி வைத்துவிட்டு காத்திருக்கிறார்.. கடந்த சில வருடங்களாகவே இதன் ஐந்தாம் பாகம் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் என சொல்லப்பட்டு வந்தது. இந்தநிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய எஸ்.என்.சுவாமி விரைவில் இந்த படம் துவங்க உள்ளது என்றும் இந்த படத்தை பார்த்துவிட்டுத்தான் தன் உயிர் போகும் என்றும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இவருக்கு தற்போது 78 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.. இவர் இதுவரை 42 படங்களுக்கு கதை எழுதியுள்ளார் அதில் 26 படங்களில் மம்முட்டியும் பத்து படங்களில் மோகன்லாலும், இரண்டு படங்களில் இவர்கள் இருவரும், இதில் இவர்களுடன் சேர்ந்தும் தனியாகவும், எட்டு படங்களில் சுரேஷ் கோபியும் நடித்துள்ளனர். இந்த சாதனைப் பட்டியலை பார்த்தாலே எஸ்.என்.சுவாமி எப்படிப்பட்டவர் என்பதை புரிந்து கொள்ளலாம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அரசியலுக்கு வரமாட்டேன் : மோகன்லால் திட்டவட்டம்அரசியலுக்கு வரமாட்டேன் : மோகன்லால் ... ரூ.4.67 லட்சம் கொடுத்து யாத்ரா டிக்கெட் வாங்கிய ரசிகர் ரூ.4.67 லட்சம் கொடுத்து யாத்ரா டிக்கெட் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Bhaskaran - Chennai,இந்தியா
12 பிப், 2019 - 05:29 Report Abuse
Bhaskaran முதல் பாகமும் சேதுராம ஐயரும் பார்த்துள்ளேன் மிகவும் இயல்பாக நடித்திருக்கும் மம்முட்டி கடைசிப்பாகத்தையும் விரைவில் நடித்து வெளிவரவேண்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in