Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரசு நினைத்தால் தமிழ் ராக்கர்ஸை ஒரேநாளில் ஒழிக்கலாம் : விஷால்

05 பிப், 2019 - 15:47 IST
எழுத்தின் அளவு:
Only-Government-will-take-action-against-Tamilrockers-says-Vishal

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை ஒழிக்க முடியவில்லை, இதை ஒழிக்க முடியாதவர்கள், இளையராஜாவுக்கும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் விழா எடுக்கச் சென்று விட்டனர். தங்களால் முடியவில்லை என்றால், ஏன், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு, அவர்கள் பொறுப்புக்கு வர வேண்டும்?' என கேட்டு, மறைமுகமாக நடிகர் விஷாலைத் தாக்கி இருந்தார் இயக்குநர் வசந்தபாலன்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு, அரசுத் தரப்பில் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்துவிட்டு வந்த, தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், வதந்த பாலன் கருத்துக்கு விளக்கம் அளித்தார்.

அவர் கூறியதாவது: தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் பைரசி இணையதளங்களை ஒழிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. நான் இதில் பாடுபடுவதால் மட்டும், அதை ஒழித்துவிட முடியாது. மத்திய, மாநில அரசுகள் நினைத்தால், ஒரே நாளில் இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும். தமிழ் ராக்கர்ஸ் இணைய தளம் குறித்து, ஏற்கனவே அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இன்றும் அதை வலியுறுத்தியுள்ளோம். அரசு, இதை ஒழிக்கும் என்று நம்புகிறோம்.

பார்த்திபன் விலகல் விவகாரம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, ஏ.ஆர்.ரஹ்மானையும், இளையராஜாவையும் ஒரே மேடையில் நிறுத்தியது பார்த்திபன் தான் எனவும், நிகழ்வுக்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அதில் கலந்து கொள்வதும், கலந்து கொள்ளாததும் அவரவர்களின் விருப்பம் எனவும் தெரிவித்தார்.

இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கார்த்தி எடுத்த புதிய முடிவுகார்த்தி எடுத்த புதிய முடிவு காப்பான் அரசியல் படம் அல்ல : மோகன்லால் காப்பான் அரசியல் படம் அல்ல : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Bhaskaran - Chennai,இந்தியா
05 பிப், 2019 - 19:00 Report Abuse
Bhaskaran திரையரங்கு கட்டணங்களை கட்டுக்குள் கொண்டுவரலாதவரை தமிழ் ராகேர்ஸ் மற்றும் திருட்டு விடீயோக்களை ஒன்றும்செய்யமுடியாது ஜனங்கள் ஆதரவு அவர்களுக்கே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in