சபரிமலை விவகாரத்தில் பிருத்விராஜ் கருத்து | தியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப் | அமைதிப்படைக்கு பிறகு எல்கேஜி : தயாரிப்பாளர் | மனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா? | அட்லிக்கு நன்றி: விக்னேஷ் சிவன் | உலகை வியக்க வைத்த சென்னை சிறுவனின் இசை வாசிப்பு | விமர்சனம் பார்த்து பண்ண வேண்டும் : பேரரசு எச்சரிக்கை | ஒரே நாளில் ஆட்டம் கண்ட 'ஒரு அடார் லவ்' | 'எ.நோ.பா.தோ' ரிலீஸ், தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி | திரையுலகில் அமிதாப்பச்சனின் 50 ஆண்டுகள் |
கடந்த வாரம் சிம்பு நடித்த வந்தா ராஜாதான் வருவேன், ஜி.வி.பிரகாஷ் நடித்த சர்வம் தாளமயம், ராம் இயக்கிய பேரன்பு ஆகிய 3 படங்கள் திரைக்கு வந்தன. இவற்றில் வந்தா ராஜாதான் வருவேன் படத்துக்கு மட்டும் ஓரளவு ஓப்பனிங் இருந்தது.
மற்ற இரண்டு படங்கள் வெளியானதே மக்களுக்கு தெரியவில்லை. இந்தப்படங்கள் ஓடும் தியேட்டர்களில் கூட்டமும் இல்லை. படம் வெளியான முதல்நாள் நிலவிய இந்த சூழல் அடுத்த நாளே மாறிப்போனது தான் ஆச்சர்யம்.
சனிக்கிழமை முதலே சிம்பு நடித்த வந்தா ராஜாதான் வருவேன் படத்துக்கு கூட்டம் இல்லை. தமிழகம் முழுக்கவே இதுதான் நிலவரம். இன்னொரு பக்கம் மவுத்டாக் பரவி ஜி.வி.பிரகாஷ் நடித்த சர்வம் தாளமயம், ராம் இயக்கிய பேரன்பு படங்களுக்கு ஓரளவுக்கு கூட்டம் வரத் தொடங்கிவிட்டது.
தன்னுடைய படத்துக்கு ஓப்பனிங் இல்லை என்ற வருத்தத்தில் இருந்த ஜி.வி.பிரகாஷ், சர்வம் தாளமயம் படம் பிக்கப் ஆனதை அறிந்து உற்சாகத்தில் இருக்கிறார்.
சிம்புவோ தன்னுடைய படத்தில் ரசிகர்களுக்குப் பிடித்தமான அம்சங்கள் இல்லை என்ற உண்மையை புரிந்து கொள்ளாமல், லைகா புரடக்ஷன்ஸ் படத்துக்கு பப்ளிசிட்டி பண்ணாமல் என் படத்தை காலி பண்ணிவிட்டனர் என்று புலம்பி வருகிறாராம்.