Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தயாரிப்பாளர் இல்லாமல் நடந்த '96' பட 100வது நாள் விழா

05 பிப், 2019 - 13:45 IST
எழுத்தின் அளவு:
96-movie-100-days-celebration-without-producer

ஒரு திரைப்படத்திற்கு முதலீடு போட்டு அந்தப் படத்தை கடன் வாங்கி கஷ்டப்பட்டு முடிப்பது தயாரிப்பாளர் தான். 2018ம் ஆண்டில் அனைவரும் கொண்டாடிய வெற்றிப் படமான '96' படத்தைத் தயாரித்தவர் மெட்ராஸ் என்டர்பிரைசஸ் நந்தகோபால். ஆனால், அந்தத் தயாரிப்பாளர் கலந்து கொள்ளாமலேயே நேற்று '96' படத்தின் 100வது நாள் விழா சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்து முடிந்தது.

நிகழ்ச்சியை படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிட்ட 7 ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தான் நடத்தியது. நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் பிரேம்குமார், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, விஜய் சேதுபதி, த்ரிஷா, வர்ஷா பொல்லம்மா, தேவதர்ஷினி, பகவதி பெருமாள், ஆதித்யா பாஸ்கர், கௌரி ஜி கிஷன் மற்றும் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக சேரன், பார்த்திபன், சமுத்திரக்கனி, லெனின் பாரதி, மித்ரன் ஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு 100வது நாள் கேடயம் வழங்கினர். பார்த்திபன் படக்குழுவினருக்கு வழங்குவதற்காக '96' என்ற எண் மட்டுமே பொறிக்கப்பட்ட கடிகாரத்தை தயார் செய்ததாகவும் அது வர தாமதமாவதால் வேறொரு பரிசை வழங்கப் போவதாகவும் அறிவித்தார்.

படத்தைப் பற்றி கலந்து கொண்டவர்கள் பாராட்டியும், அனுபவங்களையும் பேசினார்கள். ஆனால், '96' உருவாகக் காரணமாக இருந்த தயாரிப்பாளர் நந்தகோபாலைப் பற்றி யாரும் குறிப்படாதது ஆச்சரியமான ஒன்று.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இளையராஜாவுக்கு இன்னொரு நிகழ்ச்சி : இது பார்த்திபன் கனவுஇளையராஜாவுக்கு இன்னொரு நிகழ்ச்சி : ... 96 படத்திற்கு புது க்ளைமாக்ஸ் 96 படத்திற்கு புது க்ளைமாக்ஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in