சபரிமலை விவகாரத்தில் பிருத்விராஜ் கருத்து | தியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப் | அமைதிப்படைக்கு பிறகு எல்கேஜி : தயாரிப்பாளர் | மனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா? | அட்லிக்கு நன்றி: விக்னேஷ் சிவன் | உலகை வியக்க வைத்த சென்னை சிறுவனின் இசை வாசிப்பு | விமர்சனம் பார்த்து பண்ண வேண்டும் : பேரரசு எச்சரிக்கை | ஒரே நாளில் ஆட்டம் கண்ட 'ஒரு அடார் லவ்' | 'எ.நோ.பா.தோ' ரிலீஸ், தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி | திரையுலகில் அமிதாப்பச்சனின் 50 ஆண்டுகள் |
'இளையராஜா-75' நிகழ்ச்சி, திட்டமிட்டவாறு நடந்து முடிந்து விட்டாலும், நிகழ்ச்சியில் ஏகப்பட்ட குளறுபடிகள் இடையிடையே ஏற்பட்டன. முறையாக திட்டமிட்டு எல்லாவற்றையும் செயல்படுத்தும் ஆற்றல் பெற்ற நடிகர் பார்த்திபன், நிகழ்ச்சியில் பங்கேற்காதது தான், இந்த குளறுபடிகளுக்கெல்லாம் காரணம் என இப்போது சொல்லப்படுகிறது. இது குறித்து, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஒருவர் கூறியதாவது:
'இளையராஜா-75' நிகழ்ச்சி இசை ரசிகர்களை திருப்திப்படுத்தி விட்டது. ஆனால், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து அதிக ரசிகர்கள் வந்து கலந்து கொண்டனர். ஆனால், பத்தாயிரம் ரூபாய் கொடுத்தவர்கள்கூட, வெகு தூரத்தில் அமர்ந்துதான், நிகழ்ச்சியை பார்க்கும்படி ஆனது. இது, பெரிய மனக்குறையாகி விட்டது.
அதோடு, முதல் நாள் நிகழ்ச்சியில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் குத்து விளக்கு ஏற்றித் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில், பல்வேறு குளறுபடிகளை செய்தனர். ஒருங்கிணைப்பு எதுவும் இல்லை. கூடவே, தமிழ்த்தாய் வாழ்த்தை, மரு உருவாக்கம் செய்து, இஷ்டத்துக்கு இசையமைத்து ஒலிக்க விட்டனர். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. முதல் நிகழ்ச்சியே, இப்படி ஏகத்துக்கும் சொதப்பியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு, ஏ.ஆர்.ரஹ்மானை அழைத்து வருவதில் முக்கிய பங்கு பார்த்திபனுக்கு இருந்தது. அவர்தான், மிகுந்த சிரத்தை எடுத்து, அவரை அழைத்து வந்தார். ஆனால், நிகழ்ச்சியில் பார்த்திபன் கலந்து கொல்லாமல், இருந்து விட்டார். இந்தத் தகவல் இளையராஜாவுக்கும் சொல்லப்பட்டது. அவர், பார்த்திபனை சமாதானப்படுத்தினார். ஆனால், அவர் அதை ஏற்கவில்லை. அவர் மிகுந்த மனவேதனையில் இருந்ததால், நிகழ்ச்சிக்கு வராமல் தவிர்ந்தே விட்டார்.
அதோடு மட்டுமில்லாமல், இதே போன்றொரு இசை நிகழ்ச்சியை தான் தனியாக நடத்தி, அதை இளையராஜாவுக்கு சமர்ப்பிக்கவும் அவர் திட்டமிட்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்.
இளையராஜவை மேடையில், ஒரு சிம்மாசனத்தில் அமரவைத்து, அவரது பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மானை வாசிக்க வைக்க வேண்டும் என்பதுதான், பார்த்திபனின் திட்டமாக இருந்தது. அந்த திட்டத்தை, தன்னுடைய நிகழ்ச்சியில் அரங்கேற்றவும் பார்த்திபன் தயாராகி விட்டார். எப்படியோ, இளையராஜாவை போற்றும் அடுத்த இசை நிகழ்ச்சிக்கு, பார்த்திபன் அச்சாரம் போட்டு விட்டார்.