சபரிமலை விவகாரத்தில் பிருத்விராஜ் கருத்து | தியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப் | அமைதிப்படைக்கு பிறகு எல்கேஜி : தயாரிப்பாளர் | மனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா? | அட்லிக்கு நன்றி: விக்னேஷ் சிவன் | உலகை வியக்க வைத்த சென்னை சிறுவனின் இசை வாசிப்பு | விமர்சனம் பார்த்து பண்ண வேண்டும் : பேரரசு எச்சரிக்கை | ஒரே நாளில் ஆட்டம் கண்ட 'ஒரு அடார் லவ்' | 'எ.நோ.பா.தோ' ரிலீஸ், தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி | திரையுலகில் அமிதாப்பச்சனின் 50 ஆண்டுகள் |
திரையுலகத்தைப் பொறுத்தவரையில் அனைவருமே வெற்றிக்காகத்தான் உழைப்பார்கள். ஆனால், அனைத்துப் படங்களுமே வெற்றி பெறுவதில்லை. படங்கள் தோல்வியடைந்தால் அந்தத் தோல்வியை உடனே யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சில வருடங்கள் கழித்து வேண்டுமானால், அந்தப் படம் அதனால்தான் ஓடவில்லை, இதனால்தான் ஓடவில்லை என்று காரணங்களை அடுக்குவார்கள். தோல்விகள் கூட வெற்றியின் படிக்கட்டுக்களாக மாறும் என்று பலரும் நினைப்பதில்லை.
ஹிந்தியில் வெளிவந்த 'தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்' படம் தோல்வியடைந்த பின் அந்தத் தோல்வியை படத்தின் நாயகன் ஆமீர்கான் ஏற்றுக் கொண்டார். அது போலவே, தெலுங்கில் பொங்கலுக்கு வெளிவந்த 'வினய விதேய ராமா' படத்தின் தோல்வியை அதன் நாயகன் ராம்சரண் தேஜா ஏற்றுக் கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், “நாங்கள் அனைவருமே உங்களை மகிழ்விக்க கடுமையாக உழைத்து படத்தை வெளியிட்டோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எங்கள் பார்வை திரையில் சரியாக மாற்றப்படவில்லை. உங்கள் எதிர்பார்ப்புகளை எங்களால் சந்திக்க முடியவில்லை. இருப்பினும் உங்களது மகத்தான அன்பு, என்னை அர்ப்பணிப்புடன் மேலும் கடுமையாக உழைக்கத் தூண்டும். உங்கள் எதிர்பார்ப்புக்கேற்றபடி சிறந்த படங்களைக் கொடுக்க முயற்சிப்பேன்,” என்று தெரிவித்துள்ளார்.
இப்படி தோல்வியை ஏற்றுக் கொண்டு அதற்காக வருத்தம் தெரிவிக்கும் அறிக்கை நம் தமிழ் ஹீரோக்களிடமிருந்து எதிர்காலத்திலாவது வருமா...?.