Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்புவுக்கு பெரிய தோல்வி, காரணம் என்ன ?

05 பிப், 2019 - 12:52 IST
எழுத்தின் அளவு:
Vantha-Rajavathan-Varuven-fail-at-box-office

சிம்பு என்றாலே சர்ச்சை என்றுதான் தமிழ் சினிமாவில் பலரும் சொல்வார்கள். சரியாக படப்பிடிப்புக்கு வர மாட்டார், அவருடைய தலையீடு அதிகம் இருக்கும் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால், மணிரத்னம் இயக்கத்தில் 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் அவர் நடிக்க வந்ததுமே அனைத்தும் மாறிவிட்டது. சிம்பு சின்சியர் சிகாமணி ஆகிவிட்டார், இனி தொடர்ந்து பல படங்களில் நடித்து அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவார் என்றார்கள்.

ஆனால், 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தைப் பார்த்த பின் அந்த நம்பிக்கை பலருக்கும் போயிருக்கும். தெலுங்கில் எவ்வளவு பெரிய வெற்றி பெற்ற ஒரு படத்தை இப்படி மோசமாக எடுத்து வெளியிட்டுள்ளார்கள் என பவன் கல்யாண் ரசிகர்கள் குறைபட்டுப் பேசும் அளவிற்கு அந்தப் படம் அமைந்தது.

சிம்புவின் தோற்றம், அவருடைய ஹேர்ஸ்டைல், தாடி என எதுவுமே அந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமில்லாதது, படத்தில் நடித்துள்ள முக்கிய கதாபாத்திரங்களுக்கான நட்சத்திரத் தேர்வு ஆகியவை படத்தை ரசிக்கவிடாமல் செய்துள்ளன என ரசிகர்கள் குறைபட்டுக் கொண்டார்கள்.

ஜாலியான கலகலப்பான ஒரு படத்தை சிம்புவின் தற்பெருமை பேசி யாரையும் தியேட்டர் பக்கம் வரவிடாமல் செய்துவிட்டார்கள் என்ற விமர்சனம்தான் எழுந்துள்ளது. சுந்தர் .சி இயக்கத்தில் வரும் படங்கள் எப்படியவாது தப்பிப்பது வழக்கம். ஆனால், இந்தப் படம் குறைந்தபட்ச வசூலைக் கூட செய்ய முடியாமல் போய்விட்டதாம். இந்தப் படத்திற்கு மட்டும் சுமார் 25 கோடி வரை நஷ்டம் வரும் என்கிறது திரையுலகம்.

இந்த படத் தோல்வியால் சிம்பு அடுத்து நடிக்க உள்ள படங்களுக்கு சிக்கல் வரவும் வாய்ப்புள்ளது.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மிஸ்டர்.ஹீரோ கிடைக்காததால் மிஸ்டர்.லோக்கல்மிஸ்டர்.ஹீரோ கிடைக்காததால் ... தமிழ் ஹீரோக்கள் தோல்வியை ஏற்றுக் கொள்வார்களா ? தமிழ் ஹீரோக்கள் தோல்வியை ஏற்றுக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Bhaskaran - Chennai,இந்தியா
11 பிப், 2019 - 19:28 Report Abuse
Bhaskaran பெரியார் குத்து பாடி பெரிய ஆளாக முடியாது
Rate this:
Babu Desikan - Bangalore,இந்தியா
09 பிப், 2019 - 13:20 Report Abuse
Babu Desikan முதலில் ஒழுக்கம், உழைப்பு, அடுத்தவர்களை மதித்தல் போன்ற குணங்கள் வேண்டும். போதிய உடற் பயிற்சியும் இல்லை என்று தெரிகிறது. இவை எல்லாம் இருந்தும் கூட அதிர்ஷ்டம் இல்லாமல் எத்தனையோ முன்னணி நடிகர்கள் தோல்வி அடைகிறார்கள். சிம்புவிற்கு மேற்கூறிய எதுவும் இல்லை போல் தெரிகிறது.
Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
07 பிப், 2019 - 15:05 Report Abuse
இந்தியன் kumar ஓவர் புல்டு அப்பு உடம்புக்கு ஆகாது.
Rate this:
Muthu Kumarasamy - Mettupalayam, Coimbatore Dist.,இந்தியா
07 பிப், 2019 - 14:26 Report Abuse
Muthu Kumarasamy சிலம்பரசன் நல்ல நடிகர். ஆனால், சிம்புவிடம் திறமையை விட ஆணவம் அதிகம். ஆணவத்தை குறைத்து கொண்டு தன்னடக்கத்துடன் நடந்து கொண்டால் வெற்றி நிச்சயம்.
Rate this:
mohan -  ( Posted via: Dinamalar Android App )
06 பிப், 2019 - 13:52 Report Abuse
mohan than katrukolla vendiyadhu innum evlavo ulladhu enbadhai sombu unara vendum...
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kannitheevu
  • கன்னித்தீவு
  • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
  • இயக்குனர் :சுந்தர் பாலு
  Tamil New Film Watchman
  • வாட்ச்மேன்
  • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
  • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Indian 2
  • இந்தியன் 2
  • நடிகர் : கமல்ஹாசன்
  • நடிகை : காஜல் அகர்வால்
  • இயக்குனர் :ஷங்கர்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in