Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆதியின் நாயகி உதயநிதிக்கு ஜோடி

05 பிப், 2019 - 11:38 IST
எழுத்தின் அளவு:
Aathmika-to-pair-with-Udhayanidhi-stalin

அருள்நிதி நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான படம் இரவுக்கு ஆயிரம் கண்கள். இந்தப்படத்தை இயக்கிய மு.மாறன் அடுத்து, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும், கண்ணை நம்பாதே என்ற படத்தை இயக்க இருக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் துவக்கவிழா நேற்று நடைபெற்றுள்ளது. படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ஆத்மிகா நடிக்கிறார். யார் இவர் என்றுதானே கேட்கிறீர்கள்? ஹிப் பாப் தமிழா ஆதி இயக்கி, ஹீரோவாக நடித்த மீசையை முறுக்கு, படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடித்தவர் இவர் தான்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி இன்னமும் வெளியாகாமல் பெட்டிக்குள் முடங்கிக்கிடக்கும் நரகாசூரன் படத்தின் கதாநாயகிகளில் ஒருவராகவும் நடித்திருக்கிறார் ஆத்மிகா. நரகாசூரன் படம் வெளியாகாததினால் அப்செட்டில் இருந்தார் ஆத்மிகா. தற்போது, உதயநிதி உடன் முதன்முதலாக இணைந்துள்ளார்.

மு.மாறன் இயக்கிய இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தைப்போலவே இந்த படமும் கிரைம் த்ரில்லர் படமாக உருவாக இருக்கிறதாம். சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து பல மாதங்களாக வெளியாகாமல் கிடக்கும் கண்ணே கலைமானே படம் இம்மாதம் 22-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்து வரும் சைக்கோ படமும் அடுத்து வெளியாகும். அதன் பிறகு இந்தப்படம் வெளியாகுமாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மிஸ்டர் லோக்கல் என் சொந்தக் கதை : ராஜேஷ்மிஸ்டர் லோக்கல் என் சொந்தக் கதை : ... சபரிமலை கருத்து : விஜய் சேதுபதிக்கு கேரளாவில் எதிர்ப்பு சபரிமலை கருத்து : விஜய் சேதுபதிக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in