Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மேக்அப் திருப்தி இல்லை : இந்தியன் 2 படப்பிடிப்பு தள்ளிவைப்பு

04 பிப், 2019 - 10:45 IST
எழுத்தின் அளவு:
Indian-2-shooting-postponed

கமல் இயக்கத்தில் ஷங்கர் இயக்கிய படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் 80 வயது வீரமிக்க வயோதிகராக கமல் நடித்திருந்தார். அவரது இந்தியன் தாத்தா வேடம் இன்று வரை பேசப்படுகிறது. இப்போது அதன் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. காஜல் அகர்வால், சித்தார்த் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இதன் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கியது. கமல், காஜல் அகர்வால் தொடர்புடைய காட்சிகள் படமாக்கப்பட்டது. எடுத்த வரையில் காட்சிகளை போட்டுப்பார்த்த ஷங்கருக்கு கமலின் முதியவர் மேக்அப் திருப்தி அளிக்கவில்லையாம். முதல் பாகத்தில் மேக்அப் தெரியாத அளவிற்கு யதார்த்தமாக இருந்தது. இதில் மேக்அப் தூக்கலாக தெரிகிறது என்று கருதினாராம். இதனால் படப்பிடிப்பை இப்போதைக்கு தள்ளி வைத்துள்ளார் ஷங்கர். அடுத்த வாரம் அமெரிக்கா செல்லும் ஷங்கர், அங்கு ஹாலிவுட் மேக்அப் கலைஞர்களுடன் ஆலோசித்து, அவர்களை கொண்டு மேக்அப் டெஸ்ட் நடத்தி அதன் பிறகு படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
இளையராஜா 75 - திரையுலகமே திரண்டிருக்க வேண்டாமா ?இளையராஜா 75 - திரையுலகமே திரண்டிருக்க ... சிம்பு பிறந்தநாள் விழாவில் தனுஷ் பங்கேற்பு சிம்பு பிறந்தநாள் விழாவில் தனுஷ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

சத்தி வேல், நோர்வே.  (No r way) ஏன் make up போட வேண்டும், போடாமல் நடித்தால் எப்படி? ஏன் வீண் செலவு.
Rate this:
Karthik -  ( Posted via: Dinamalar Android App )
04 பிப், 2019 - 12:09 Report Abuse
Karthik 2021 ல வந்துரும்.
Rate this:
04 பிப், 2019 - 11:30 Report Abuse
Mohaideen Mohamed Razeen இந்தியன் 2முதல் பார்வை வெளியானபோதே முதல் பாகத்தில் இருந்த கமலஹாசனை விட இந்தப்பாகத்தில் அவரது கன்னம் சற்று பூசி மெழுகினாற்போல இருக்கிறது என்று நினைத்தேன்.அதுதான் மனதுக்கு ஒட்டாமல் அந்நியப்பட்டு இருக்கிறது.பரவாயில்லை சங்கர் இப்போதாவது விழித்துக்கொண்டார்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in