Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளையராஜா 75 - திரையுலகமே திரண்டிருக்க வேண்டாமா ?

04 பிப், 2019 - 10:42 IST
எழுத்தின் அளவு:
Ilayaraja-75-:-More-celebrities-not-attend.?

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நடத்திய இளையராஜா 75 நிகழ்ச்சி சர்ச்சைகள், வழக்குகள் என அனைத்தையும் கடந்து இனிதே நடந்து முடிந்தது. நடந்த விழா இனிமையாக நடந்து முடிந்ததா அல்லது அதிலும் சர்ச்சைதானா என்று எண்ணும் விதத்தில் சிலர் நடந்து கொண்டு வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாவிலும் தனிப் பெரும் பங்காற்றியவர் இளையராஜா. 1000 படங்கள், சராசரியாக 5000 பாடல்கள், எத்தனை பாடலாசிரியர்கள், பாடர்கள், பாடகிகள், இசைக் கலைஞர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், குறிப்பாக நடிகர்கள் என பலரும் அவருடைய இசையால் பயனடைந்திருக்கிறார்கள்.

எத்தனைவித கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதையெல்லாம் மறந்து மொத்த திரையுலகமே திரண்டு அவரை வாழ்த்தியிருக்க வேண்டும். குறிப்பாக தமிழ்த் திரையுலகத்தின் ஒட்டு மொத்த கலைஞர்களும் வந்திருக்க வேண்டாமா?.

இளையராஜா என்றதுமே ஏட்டிக்குப் போட்டியாக ரகுமானைப் பற்றிப் பேசுவார்கள். அப்பேர்ப்பட்ட ரகுமானே மேடையேறி வந்து அவர் என் குரு, தலைமையாசிரியர் என்று பேசி பாராட்டி இசைத்துவிட்டும் போனார்.

இளையராஜா இசையில் ஒரு படம் கூட இயக்காத ஷங்கர் வந்தார். எப்போதோ பிரிந்தாலும் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் மணிரத்னம் வந்தார்.

குடும்ப விழா ஒரு வாரத்தில் இருக்கும் நிலையில் ரஜினிகாந்த் வந்தார், அரசியல், படப்பிடிப்பு இரண்டுக்கும் இடையில் கமல்ஹாசன் வந்து வாழ்த்தி பாடவும் செய்தார்.

இளையராஜா தங்களது படத்திற்கு இசையமைத்தால் தான் வர வேண்டுமா. இசை உலகமே கொண்டாடும் ஒரு இசை மேதையை வாழ்த்த தனிப்பட்ட விருப்பு வெறுப்பு, அரசியல், ஈகோ இவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு வந்திருக்க வேண்டாமா ?.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், மணிரத்னம், ஷங்கர் ஆகியோருக்கு இருக்கும் அந்தப் பண்பு அவருடன் பல படங்களில் பணிபுரிந்த, நெருக்கமான ஒரு சிலருக்கு ஏன் வரவில்லை.

இப்போதும் இந்த விழா குறித்து விமர்சித்துப் பேசுபவர்கள் தேவையில்லாமல் இளையராஜாவை விமர்சித்து அவர்களது குறுகிய மனப்பான்மையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இளையராஜாவை விழா எடுத்துதான் கொண்டாட வேண்டும் என்றில்லை, நிமிடத்திற்கு நிமிடம் உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் அவருடைய பாட்டைக் கேட்டுக் கொண்டு ஏதோ ஒரு ரசிகன் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (20) கருத்தைப் பதிவு செய்ய
இளையராஜா நிகழ்ச்சியில் மகளுடன் பாடிய கமல்இளையராஜா நிகழ்ச்சியில் மகளுடன் ... மேக்அப் திருப்தி இல்லை : இந்தியன் 2 படப்பிடிப்பு தள்ளிவைப்பு மேக்அப் திருப்தி இல்லை : இந்தியன் 2 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (20)

Achchu - Chennai,இந்தியா
06 பிப், 2019 - 02:13 Report Abuse
Achchu இந்த விழாவில் சின்ன சின்ன குறைகளுக்கு மட்டுமல்ல சிறப்பாக நடந்ததற்கு கூட CREDIT GOES TO தடை கேட்டு நீதிமன்றம் சென்றவர்களுக்கே இளைய ராஜா 75 மட்டும்தான் நடத்த வேண்டுமா இளைய ராஜா 76 ஐ இந்த விழாவுக்கு வந்தவர்கள் வராதவர்கள் எல்லாம் சேர்ந்து நிறைவாக நடத்துவார்கள் அது நிச்சயம் குறித்து வைத்துக் கொள்ளலாம்
Rate this:
nizamudin - trichy,இந்தியா
04 பிப், 2019 - 17:54 Report Abuse
nizamudin ராஜா சாரின் வருகைக்கு பிறகு திரை உலகத்தினர் எல்லோருடைய வெற்றியிலும் ராஜா சாரின் பங்கு நிறைய உள்ளது இது மறுக்க முடியாத உண்மை நீதானா அந்த குயில் பாடல் இல்லை என்றால் முதல் மரியாதை படம் வெற்றி அடைந்து இருக்காது நெஞ்சை வருடும் இசைக்கு சொந்தக்காரர் ராஜா சார்
Rate this:
nizamudin - trichy,இந்தியா
04 பிப், 2019 - 17:46 Report Abuse
nizamudin வராதவர்கள் துரதிருஷ்ட சாலிகள்
Rate this:
King of kindness - muscat,ஓமன்
04 பிப், 2019 - 15:42 Report Abuse
King of kindness ஒரு மாமேதையிடம் கொஞ்சம் தலைக்கனம் இருக்க தான் செய்யும். அதையெல்லாம் நினைத்துக்கொண்டிருக்காமல் அனைவரும் வந்து இசைஞானியை வாழ்த்தியிருக்க வேண்டும்
Rate this:
Kumaresan P - Aranthangi,இந்தியா
04 பிப், 2019 - 15:07 Report Abuse
Kumaresan P இவரால் லாபம் அடைந்தவர்களை அழைக்காமல், நம்மை போன்ற செவிகளில் பயன் அடைந்தவர்களை அழைத்திருந்தால், உலகமே திரண்டிருக்கும்.
Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kannitheevu
  • கன்னித்தீவு
  • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
  • இயக்குனர் :சுந்தர் பாலு
  Tamil New Film Watchman
  • வாட்ச்மேன்
  • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
  • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Indian 2
  • இந்தியன் 2
  • நடிகர் : கமல்ஹாசன்
  • நடிகை : காஜல் அகர்வால்
  • இயக்குனர் :ஷங்கர்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in