Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமலுக்கு தான் இளையராஜா நல்ல பாடல்கள் கொடுத்தார் : ரஜினி வருத்தம்

03 பிப், 2019 - 23:08 IST
எழுத்தின் அளவு:

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், இசைஞானி இளையராஜாவை கவுரவிக்கும் நிகழ்ச்சி, இளையராஜா 75 என்ற பெயரில் நேற்றும், இன்றும் சென்னையில் நடந்தது. நேற்றைய நிகழ்ச்சியை கவர்னர் பன்வாரிலால் துவக்கி வைத்தார். ரஹ்மான் இசையமைக்க, இளையராஜா பாடிய சுவாரஸ்ய நிகழ்வுகளும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. இளையராஜாவுக்கு தங்கத்தினால் ஆன வயலின் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.

இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் இளையராஜாவின் இன்னிச்சை கச்சேரி நேரடியாக நடந்தது. இதில் ரஜினி, கமல், விஜய் சேதுபதி, விக்ரம், தெலுங்கு நடிகர்கள் மோகன் பாபு, வெங்கடேஷ், மணிரத்னம், ஷங்கர், பாலா, நாசர், கமீலா, கார்த்தி, விக்ரம், பிரபு, ரகுமான், பி.வாசு, லிங்குசாமி, ராதாமோகன், ஜெயம் ரவி, சந்தோஷ் நாராயணன், விஜய் ஆண்டனி, விவேக், வையாபுரி, ஸ்ருதிஹாசன், எஸ்.பி.முத்துராமன், நிக்கி கல்ராணி, ராஷி கண்ணா உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர்.

விழாவில் நடிகர் ரஜினி பேசும்போது : கலைகளில் சிறந்தது இசை, இசையமைப்பாளர்களுக்கு ஆண்டவனின் ஆசிர்வாதமும், நம்மை இயக்கும் சக்தியும் உள்ளது. சில லிங்கம் நீரில் உருவாகும், சில லிங்கம் மனிதனால் உருவாக்கப்படும், சுயம்புவாகவும் சில லிங்கம் உருவாகும், இளையராஜா சுயம்பு லிங்கம் போன்றவர், அது அபூர்வமாகவே உருவாகும், அது வெளிப்படும் போது அதன் சக்தியும், அதிர்வும் அபாரமாக இருக்கும்.

அன்னக்கிளியில் ஆரம்பித்த அந்த அபூர்வ சக்தியை இப்போது வரை பார்க்கிறேன். நான், அவரை சார் என்று தான் கூப்பிடுவேன், திடீர்னு ஒருநாள் பேண்ட் சர்ட்டிலிருந்து வேட்டி ஜிப்பாவுக்கு மாறினார், அந்த நிமிடத்திலிருந்து அவரை சாமினு கூப்பிட ஆரம்பிச்சுட்டேன், என்னை, அவரும் சாமினு தான் கூப்பிடுகிறார், மன்னன் படத்தில் என்னை பாட வச்சார், எனக்கு நிறைய பாடல் போட்டிருக்கார். எனது படங்களை விட கமல் படங்களுக்கு தான் மிக அருமையான இசைகளை கொடுத்தார் என்றார்.

அப்போது குறுக்கிட்ட இளையராஜா, இவர் இப்படி சொல்றார், அவரை கேட்டால் ரஜினிக்கு போட்ட மாதிரி எனக்கு ஏன் பாட்டு போட மாட்டேங்கிறீங்க என சொல்வார் என்றார். பிறகு மேடைக்கு வந்த கமல்ஹாசனும் அதை அமோதிப்பது போல சொன்னார்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
ஏ.ஆர்.ரகுமான் அழைத்தும் போகாத பார்த்திபன்ஏ.ஆர்.ரகுமான் அழைத்தும் போகாத ... இளையராஜா நிகழ்ச்சியில் மகளுடன் பாடிய கமல் இளையராஜா நிகழ்ச்சியில் மகளுடன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

Prakrith -  ( Posted via: Dinamalar Android App )
04 பிப், 2019 - 10:10 Report Abuse
Prakrith அது ஒரு செல்லமான சீண்டல் மற்றும் உரிமை. தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் அன்பர்களே.
Rate this:
raghavan - Srirangam, Trichy,இந்தியா
04 பிப், 2019 - 10:05 Report Abuse
raghavan அப்படி பார்த்தால், மோகன் மற்றும் ராமராஜன் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆனதற்கு காரணமே இளையராஜாதான். ரஜினி, கமல் எல்லாம் பின்னால்தான் வருவார்கள்.
Rate this:
aravind - chennai,இந்தியா
04 பிப், 2019 - 09:45 Report Abuse
aravind ....
Rate this:
mupaco - Madurai,இந்தியா
04 பிப், 2019 - 09:06 Report Abuse
mupaco மோகன் மாதிரி வருமா?
Rate this:
ngopalsami - Auckland ,நியூ சிலாந்து
04 பிப், 2019 - 09:02 Report Abuse
ngopalsami ஆண்டவன் தமிழகத்திற்கு கொடுத்த ஒரு விலை மதிப்பில்லா வைர கிரீடம். அவரால் தமிழகம் பெருமை அடைகிறது. அவர் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இசைக்கு பனி செய்ய வேண்டும் என்பது அனைவரின் ஆசை.
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in