Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அதிகாரிகளின் செயல் மிருகத்தனமானது - ஜி.வி.பிரகாஷ்

03 பிப், 2019 - 14:24 IST
எழுத்தின் அளவு:
gv-prakash-anger-on-tn-officials-for-chinnathambi-elephant-issue

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ், சமூகம் சார்ந்த விசயங்களிலும் அக்கறை கொண்டவர். அதன்காரணமாக தமிழகத்தில் நடக்கும் சில மக்கள் போராட்டங்களில் கலந்து கொண்டு தனது சமூக நோக்கத்தை வெளிப்படுத்தியவர்.

இந்நிலையில், ஊருக்குள் புகுந்து நாசம் செய்து வந்த காட்டு யானை சின்னதம்பியை கடந்த 25-ந்தேதி பொள்ளாச்சி அருகே உள்ள காட்டுப்பகுதிக்குள் விட்டனர். ஆனால் அது திரும்பவும் ஊருக்குள் வந்து விட, அந்த யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் தொடர்ந்து அதை விரட்டியதால் உணவு, தண்ணீர் அருந்தாமல் இருந்த அந்த சின்னதம்பி யானை மயக்கம் போட்டு விழுந்தது.


இந்த நிலையில், மயக்கம் தெளிந்ததும் அதை காட் டுக்குள் விரட்ட அதிகாரிகள் தயாராக இருக்கும் நிலையில், அந்த யானையை கும்கியாக மாற்றலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


இதையடுத்து ஜி.வி.பிரகாஷ் டுவிட்டரில் ஒரு கருத்து வெளியிட்டுள்ளார். அதில், வாழும் உரிமை அந்த யானைக்கும் உள்ளது. தன் சகோதரனை பிரிந்த சோகத்தில் அலைந்து கொண்டிருக்கும் யானையை மேலும் துன்புறுத்துவது போன்று அதை கும்கியாக்குவோம் என்று அதிகாரிகள் எடுத்திருக்கும் முடிவு மிருகத்தனமானது. இரண்டு யானைகளையும் மீண்டும் ஒன்று சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
அரசியல்வாதிகளை கலாய்க்கும் ஆர்ஜே பாலாஜிஅரசியல்வாதிகளை கலாய்க்கும் ஆர்ஜே ... ஏ.ஆர்.ரகுமான் அழைத்தும் போகாத பார்த்திபன் ஏ.ஆர்.ரகுமான் அழைத்தும் போகாத ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Santhosh Kumar - male,மாலத்தீவு
05 பிப், 2019 - 16:31 Report Abuse
Santhosh Kumar நடிகர்கள் உங்கள் வேலை பார்த்தீர்கள் என்றால் அதுவே மக்களுக்கு செய்யும் நல்ல காரியம்
Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
04 பிப், 2019 - 17:32 Report Abuse
Srinivasan Kannaiya இக்கருத்தை உள்ளடக்கி... அந்த சின்னத்தம்பியை ( யானை ) வைத்து ஒரு படம் எடுக்கலாமே .. அப்பவெனும் வன ஊழியர்கள் அதை விட்டுவிடுவார்கள்
Rate this:
Senthamizhsudar - Chennai,இந்தியா
04 பிப், 2019 - 10:23 Report Abuse
Senthamizhsudar நீங்க உருப்படாத பாட்டுக்கு இசை அமைச்சு மக்களோட உழைத்த பணம் என்ற இரத்தத்தில் உருஞ்சுவதர்க்கு ஒப்பிடிம்போது இது ஒன்னும் பெரிய விஷயமே கிடையாது
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
04 பிப், 2019 - 07:32 Report Abuse
Mani . V பரவாயில்லை ஜி. வி. பிரகாஷுக்கு மிகவும் தைரியம்தான். உண்மையை உரக்கச் சொல்லியுள்ளார். வாழ்த்துக்கள் ஜி.வி. பிரகாஷ்
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
04 பிப், 2019 - 04:03 Report Abuse
meenakshisundaram கருத்து கூறுவது எளிதே ,ஆனால் இதை எப்படி செயல் படுத்துவது என்பதே முக்கியம் அல்லவா? மேலும் இவ்வாறு அதிகாரிகள் முடிவு செய்தல் சூழ்நிலையை மனதில் வைத்தே. இந்த எண்ணம் நீட்டித்துக்கொண்டே போனால் கடைசியில் புலால் உண்ணுபவர்களும் இந்த தவற்றையே செய்கிறார்கள் என்பதே உண்மை.அவர்களும் ஒரு உயிர் என்ன ஒன்பதாயிரம் உயிர்களை உணவு மேஜைக்காக thane பறிக்கிறார்கள்? பிரகாஷ் என்ன சொல்கிறார்? என்ன செய்யப்போகிறார்?வள்ளலார் வாழ்ந்த தமிழக்தில் உயிர்க்கொலையை இன்னும் ஒரு தொழிலாகவோ அல்லது வயிற்றை ரொப்பிக்கொள்ளவோ செய்யலாமா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kannitheevu
  • கன்னித்தீவு
  • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
  • இயக்குனர் :சுந்தர் பாலு
  Tamil New Film Watchman
  • வாட்ச்மேன்
  • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
  • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Indian 2
  • இந்தியன் 2
  • நடிகர் : கமல்ஹாசன்
  • நடிகை : காஜல் அகர்வால்
  • இயக்குனர் :ஷங்கர்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in