Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளையராஜாவை எதிர்த்தவர்களுக்கும் வரலாற்றில் இடம் உண்டு: விஷால்

03 பிப், 2019 - 13:48 IST
எழுத்தின் அளவு:
vishal-praises-ilayaraja

இளையராஜாவின் 75வது பிறந்த ஆண்டு விழாவில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் வரவேற்புரை ஆற்றினார். அப்போது இந்த நிகழ்ச்சியை எதிர்த்தவர்களும் வரலாற்றில் இடம் பிடிப்பார்கள் என்றார். மேலும் அவர் பேசியதாவது:

எல்லா நாடுகளிலும் ஆட்சி செய்வதற்கு ராஜாக்கள் இருப்பார்கள். ஆனால் பாட்டு என்றால் அதற்கு ஒரே ராஜா இளையராஜாதான். கன்னியாகுமரில் இருந்து காஷ்மீர் வரை கார் ஓட்டவேண்டும் என்றால் பெட்ரோல் இருக்கிறதா? இல்லையா? என்று பார்ப்பதை விட, இளையராஜா பாடல்கள் இருக்கிறதா? என்று தான் டிரைவர்கள் பார்ப்பார்கள். அவருக்கு பாராட்டு விழா நடத்துவது எங்களுக்கு பெருமை மட்டுமல்ல. எங்கள் கடமையும் கூட.


அவரைபோல் இன்னொருவர் பிறக்க முடியாது. இப்படியொரு சாதனைகளும் நிகழ்த்த முடியாது. எங்கள் துறையை சேர்ந்த இளையராஜாவுக்கு நாங்கள் விழா நடத்துவது தவறு இல்லை. தவறு என்று சொல்கிறவர்கள் சரியில்லை. அப்பாவுக்கு பிள்ளை எவ்வளவு செலவு செய்தாலும் அது தவறாகுமா?. சிலர் இந்த விழாவை நடத்தக்கூடாது என்றனர்.


அப்படிப்பட்டவர்களுக்கு என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா என்று இளையராஜா அன்றைக்கு எழுதிய பாடல் வரிகள் மூலம் பதில் சொல்லியிருக்கிறார். இந்த விழா வரலாற்றில் இடம் பிடிக்கும். அதே நேரத்தில் இதை எதிர்த்தவர்களும் வரலாற்றில் இடம்பிடிப்பார்கள். என்றார்.


Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மகள் திருமணத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி லதா ரஜினிகாந்த் மனுமகள் திருமணத்துக்கு போலீஸ் ... தியேட்டர்களில் வெளியாகும் சூர்யாவின் என்ஜிகே டீசர் தியேட்டர்களில் வெளியாகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Sankar - Chennai,இந்தியா
09 பிப், 2019 - 14:31 Report Abuse
Sankar விஷால் உன் பாலிடிக்ஸ் தாங்க முடியல....
Rate this:
Balaji Elumalai - chennai,இந்தியா
05 பிப், 2019 - 13:24 Report Abuse
Balaji Elumalai ராஜாவை குறை கூறுவது சிறுபிள்ளைத்தனமானது ஏனெனில் எம்எஸ்வி எந்த காலத்திலும் குறை சொன்னதில்லை மூடருக்கு புத்தி சொன்னா கேட்க மாட்டார்கள்
Rate this:
vbs manian - hyderabad,இந்தியா
03 பிப், 2019 - 15:46 Report Abuse
vbs manian இளையராஜா சிறந்த கலைஞர். அனால் இவரைப்போல் இல்லை என்பது மிஹாய்ப்படுத்தப்பட்டது.. எம் ஸ் விஸ்வநாதன் என்று கொண்டாடப்படாத கலைஞரை மெல்லிசை பிரியர்கள் வாழ்நாள் முழுதும் நினைப்பார்கள்.
Rate this:
சத்தி வேல், நோர்வே. நல்லாய் சொன்னீர்கள், MSV ஐயாவை அசைக்க முடியாது ,அன்னக்கிளி பாடல்கள் கூட MSV ஐயா அவர்களின் பாடல்களைத் தழுவியது தான். முன்னர் ஒரு முறை கங்கை அமரன் ஐயாவே கூறியது....
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
04 பிப், 2019 - 05:27Report Abuse
Mirthika Sathiamoorthiஇளையராஜாவையும் மெல் இசையையும் எதிர் எதிர் திசையில் நிறுத்தி கருத்து சொல்வது வாடிக்கையாகி விட்டது...MSV தனது குரு என்று இசைஞானி சொன்னதுக்கு அப்புறம், அவர் உதிர்த்த எச்சை சோற்றில் எடுத்தது எனது பாடல்கள் என ராஜா சொன்னதுக்கப்புறமும்..MSV க்கா எடுத்த மாபெரும் பாராட்டு விழாவில் MSv யின் கால்களில் சாஷ்டாங்கமாக இசைஞானி விழுந்ததுக்கப் புறமும்... இசைஞானியை மட்டம் தட்ட MSv பெயரை திரும்ப திரும்ப உபயோகிப்பது இளையராஜாவின் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சி யன்றி வேறு என்ன சொல்ல...?...
Rate this:
ravichandran - Hosur,இந்தியா
04 பிப், 2019 - 13:00Report Abuse
ravichandranமிக சரியாக சொன்னீர்கள் நண்பரே...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kannitheevu
  • கன்னித்தீவு
  • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
  • இயக்குனர் :சுந்தர் பாலு
  Tamil New Film Watchman
  • வாட்ச்மேன்
  • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
  • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Indian 2
  • இந்தியன் 2
  • நடிகர் : கமல்ஹாசன்
  • நடிகை : காஜல் அகர்வால்
  • இயக்குனர் :ஷங்கர்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in