Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உலக மக்களின் உள்ளத்தில் இடம் பிடித்தவர் இளையராஜா: கவர்னர் புகழாரம்

03 பிப், 2019 - 12:13 IST
எழுத்தின் அளவு:
governor-praises-ilayaraja

இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு இது 75வது பிறந்த ஆண்டு. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் இளையராஜாவுக்கு பிரமாண்ட பாராட்டு விழாவை நடத்த முடிவு செய்தது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இரண்டு நாள் நடக்கும் இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் நிகழ்வை நேற்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:

தேனி மாவட்டத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, நிதி வறுமை காரணமாக 14 வயதில் தன்னுடைய அண்ணன் பாவலர் வரதராஜன் தலைமையிலான இசை குழுவில் பயணித்தார். 10 ஆண்டுகள் தென் இந்தியா முழுவதும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இயக்குனர் பஞ்சு அருணாச்சலம், அன்னக்கிளி படத்துக்கு இசை அமைப்பதற்கு கொடுத்த வாய்ப்பு அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. இதைதொடர்ந்து அவர் படைத்தது எல்லாம் வரலாறு தான்.


இளையராஜாவின் பாடல்கள், திரைப்பட உலகில் புது வசந்தத்தை ஏற்படுத்தியது. நாட்டுப்புற பாடல்களில் இளையராஜா மகுடமாக திகழ்ந்தார். நாட்டுப்புற இசையோடு, பாரம்பரிய இசையை திறம்பட இணைத்ததன் மூலம் தமிழகத்தில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார். தமிழர்களின் மனதில் இசையால் ஆட்சி செய்தார். கடந்த 35 ஆண்டுகளாக இசை என்ற பொக்கிஷத்தை திறந்து, அவர் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். அது எப்போதும் வாழ்ந்துகொண்டே இருக்கும்.


ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில், 7 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். உலக அளவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். எல்லா காலக் கட்டத்திலும் சிறந்த இசை அமைப்பாளராக விளங்கிய இளையராஜாவை கரவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இசைக்கு அவர் அளித்த நீண்டகால பங்களிப்பு, இந்தியாவில் மட்டும் இன்றி உலக அளவில் பல லட்சக்கணக்கான மக்களின் இதயத்தில் அவருக்கு நீங்காத இடத்தை கொடுத்திருக்கிறது. இதனால் மத்திய-மாநில அரசுகள் மற்றும் அவருடைய ரசிகர்கள் புகழ் மற்றும் அங்கீகாரத்தை இளையராஜாவுக்கு கொடுத்துள்ளனர்.


இருந்தபோதிலும் அவர் எளிமையாக வாழ்ந்து, இப்போதும் இசை மீது தீவிர ஆர்வம் செலுத்தி வருகிறார். அதனால் தான் அவர் இசைஞானி என்ற பட்டத்துக்கு தகுதியானார். இசைக்கு தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்து, இயற்கையோடு நெருங்கி பயணிப்பவர் . லட்சக்கணக்கானவர்கள் அவருடைய இசையை கேட்க காத்திருக்கிறோம். அவருடைய சாதனைகள் இன்னும் பல ஆண்டுகள் தொடரவேண்டும் என்று வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஜோதிகாவிடம் இருந்து நல்ல செய்தி வருமா?; காத்திருக்கும் சூர்யாஜோதிகாவிடம் இருந்து நல்ல செய்தி ... எனது ஹெட் மாஸ்டர் இளையராஜா: ஏ.ஆர்.ரகுமான் நெகிழ்ச்சி எனது ஹெட் மாஸ்டர் இளையராஜா: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Saravanan AE - Navi Mumbai,இந்தியா
03 பிப், 2019 - 17:07 Report Abuse
Saravanan AE இசை அரசர் இளையராஜா அவர்களின் 75-ம் பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் மேலும் நீண்ட காலம் வாழ்ந்து மேலும் நல்ல பாடல்களை அளிக்க வேண்டும். அவருக்கு விழா எடுப்பது பாராட்டத்தக்கது. திரை உலகத்திற்கும் நன்றி.
Rate this:
தலைவா - chennai,இந்தியா
04 பிப், 2019 - 09:11Report Abuse
தலைவா எனக்கு தெரிந்து இசைஞானி திறமையானவர் ஆனால் பிழைக்க தெரியாதவர் மகுடிக்கு மயங்கும் பாம்பு போல புகழுக்கு ஆசை மற்றும் மயக்கம் ஏன் போதையே கொள்கிறார் அதனால் அவரது இந்த புகழ் போதையை சிலர் தமக்கு சாதகமாக பயன் படுத்தி கொள்கின்றனர் உலகத்தரமான இசையை அவர்கள் மிக குறைந்த ஊதியம் கொடுத்து வாங்கி கொள்கின்றனர் கூடுதலாக சாமி, ராக தேவன் ,இசை கடவுள் என்று புகழ்ந்தால் போதுமானது இப்போதும் கூட பாராட்டு விழா செலவு போக மிக பெரிய வருவாயை தயாரிப்பாளர் சங்கம் ஈட்ட போவதுதான் நிதர்சனம். இதனைத்தான் சரியாக புரிந்து கொண்டு அமரன் அவர்கள் சில சமயம் அண்ணனை சாடுகிறார் ஆனால் இதனை ராஜாவும் புரிந்து கொள்ளவில்லை அவரது ரசிக கண்மணிகள் புரிந்து கொள்ள போவதுமில்லை....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kannitheevu
  • கன்னித்தீவு
  • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
  • இயக்குனர் :சுந்தர் பாலு
  Tamil New Film Watchman
  • வாட்ச்மேன்
  • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
  • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Indian 2
  • இந்தியன் 2
  • நடிகர் : கமல்ஹாசன்
  • நடிகை : காஜல் அகர்வால்
  • இயக்குனர் :ஷங்கர்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in