Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வசூல் டல்; சிம்பு அப்செட்!

03 பிப், 2019 - 11:33 IST
எழுத்தின் அளவு:
simbu-upset-on-vandha-rajava-dhan-varuven-collection

நடிகர் சிம்பு நடிக்க, சுந்தர்.சி இயக்கத்தில் உருவான படம் 'வந்தா ராஜாவாதான் வருவேன்'. இந்தப் படம், கடந்த மாதம் வெளியாக இருந்தது. ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் ஆகிய இருபெரும் படங்கள் ரிலீஸ் ஆனதால், அதோடு போட்டி போட வேண்டாம் என முடிவெடுத்து, இம்மாதம் முதல் தேதி ரிலீஸ் செய்ய, படக் குழு முடிவெடுத்தது.

அதையடுத்து, இப்படம் பிப்.,1 அன்று வெளியானது. இதில் சிம்புக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் பிரபு, கேத்தரீன் தெரசா, மகத் ராகவேந்திரா, நாசர், ரம்யா கிருஷ்ணன், ரோபோ சங்கர், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், சுமன், ஸ்ரீரஞ்சினி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், 'வந்தா ராஜாவா தான் வருவேன்' படம், சென்னையில், முதல் நாளில் மட்டும், 43 லட்ச ரூபாய் வசூல் செய்துள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது.


இதையறிந்து, சிம்புவும் அவரது ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிம்பு ஏற்கனவே நடித்து வெளியான 'செக்க சிவந்த வானம்' படம், வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தின் வசூலைக் காட்டிலும் கூடுதலாக வசூலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
தயாரிப்பாளர் சங்கப் பொறுப்பு: ஏன் விலகினார் பார்த்திபன்?தயாரிப்பாளர் சங்கப் பொறுப்பு: ஏன் ... ஜோதிகாவிடம் இருந்து நல்ல செய்தி வருமா?; காத்திருக்கும் சூர்யா ஜோதிகாவிடம் இருந்து நல்ல செய்தி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

Cheran Perumal - Radhapuram,இந்தியா
06 பிப், 2019 - 06:30 Report Abuse
Cheran Perumal நடிப்பதோடு நிறுத்தி கொண்டால் நன்றாக இருக்கும். தேவையில்லாமல் வீரமணி & கோ வுடன் கூத்தடித்து பெயரைக் கெடுத்துக்கொண்டார்.
Rate this:
Kannan - Ramanathapuram,இந்தியா
06 பிப், 2019 - 01:11 Report Abuse
Kannan சிம்புவை வைத்து படம் எடுத்தவர்களுக்கான நஷ்டயீடை வெங்காய(பெரியார்) ட்ரஸ்ட்டில் இருந்து சரி செய்து விடுவார்கள்.
Rate this:
jayanantham - tamilnaadu ,இந்தியா
05 பிப், 2019 - 05:24 Report Abuse
jayanantham இவனுக்கு 4.3 லட்சமே அதிகம். இவன் என்னைக்கு தமிழ் சினிமாவை விட்டு ஓடுறானோ அன்னைக்குத்தான் அவனுக்கும் விடிவு காலம் நிலையான புத்தி இல்லாதவன்.
Rate this:
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
04 பிப், 2019 - 12:42 Report Abuse
Subramanian Arunachalam ஒரு பீப் சாங் போடு
Rate this:
04 பிப், 2019 - 10:56 Report Abuse
கிழவன் நீங்க தானே பாலூத்த சொன்னீங்க .... அதான் ஊத்திட்டாய்ங்க ....
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in