வாட்ஸ் அப்பில் இருந்து வெளியேறிய மோகன்லால் | பொன்னியின் செல்வனிலிருந்து விலகினார் விஜய் சேதுபதி? | விஜய் பிரமாதமான டான்சர்: ரமேஷிடம் தகவல் பகிர்ந்த அஜித் | சபரிமலை விவகாரத்தில் பிருத்விராஜ் கருத்து | தியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப் | அமைதிப்படைக்கு பிறகு எல்கேஜி : தயாரிப்பாளர் | மனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா? | அட்லிக்கு நன்றி: விக்னேஷ் சிவன் | உலகை வியக்க வைத்த சென்னை சிறுவனின் இசை வாசிப்பு | விமர்சனம் பார்த்து பண்ண வேண்டும் : பேரரசு எச்சரிக்கை |
கடந்த சில நாட்களுக்கு முன், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட நடிகர் பார்த்திபன், திடுமென அந்தப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். இது திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. இளையராஜா-75 நிகழ்ச்சியில் பாத்திபன் கருத்தை, யாரும் கேட்கவில்லை என்பதால் தான், அவர் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொறுப்பிலிருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் பார்த்திபன் தீவிர இளையராஜா ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் இளையராஜாவுக்கு நடத்தும் பாராட்டு விழாவில், பார்த்திபனின் வித்தியாசமான யோசனையால், மேடையை அழகுபடுத்துவார் என நினைத்தே, விழாக் குழுவில் பார்த்திபனுக்கு முக்கிய இடம் அளித்தனர். அவரும் எப்படியெல்லாம் விழாவை சிறப்பிக்கலாம் என்று பல்வேறு ஐடியாக்களை விழாக் குழுவில் வைத்தார்.
அவர் கொடுத்த ஐடியாக்களில் ஒன்று - இருபது ஆர்மோனியத்தை மேடையில் வைத்து, அதில் எல்லாவற்றிலும் வாசித்தால், இளையராஜாவின் டியூன் வருகிறதா அல்லது இளையராஜாவின் ஆர்மோனியத்தில் வாசித்தால் மட்டும்தான், அவர் பாடல்களின் டியூன் வருகிறதா என்பதை மேடையிலேயே செய்து காட்டும்படி இளையராஜாவிடம், பார்த்திபன் வேண்டுகோள் வைத்தார். இளையராஜாவும் எல்லா ஆர்மோனியத்திலும் தன்னுடைய பாடல்களையும், புதிய பாடலுக்கான டியூனையும் வாசித்துக் காட்டுவார். இப்படியொரு ஐடியாவை வைத்துக் கொண்டுதான், இருபது ஆர்மோனியத்தை கேட்டிருக்கிறார் பார்த்திபன். ஆனால், அதெல்லாம் தர முடியாது என்று கூறிவிட்டனர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருப்பவர்கள்.
மேலும் அழைப்பிதழை வெறும் இரண்டு பக்கமாக அச்சிடாமல் இளையராஜா ஆயிரம் படங்களை தாண்டியதை நினைவுபடுத்தும் விதமாக, ஒவ்வொரு படத்தையும் அச்சிட்டு, ஆயிரம் பக்கமாக கொடுக்கலாம் என்று கூறியிருக்கிறார். அதையும் யாரும் கண்டு கொள்ளவில்லை. இந்த கோபத்தில்தான், விழாக் குழுவிலிருந்து விலகிக் கொண்டார் பார்த்திபன்.
அவரை பலரும் சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. இப்போது ராஜா நிகழ்ச்சிக்கு புதிய சட்டை ஒன்றை தைத்திருக்கிறார். அதில் ஆர்மோனியத்தின் கருப்பு - வெள்ளைக் கட்டைகள் இருப்பது போல், டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. தனக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தினரால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்து கவலைப்படாமல், இளையராஜாவின் ரசிகனாக நிகழ்ச்சியைப் பார்க்க இருக்கிறார். தயாரிப்பாளர் சங்கப் பொறுப்பில் இருந்து விலகியிருக்கும் பார்த்திபன், அதை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். சுயம் பாதிக்கப்படும்போது, சோறு இரண்டாம்பட்சம்தான் என, அதில் கடுமையாக பதிவிட்டிருக்கிறார்.
தயாரிப்பாளர் சங்கத்தில் நடக்கும் குளறுபடிகள் அனைத்தும், நடிகர் பார்த்திபனுக்கு முழுமையாக தெரியும் என்பதால், இளையராஜா -75, விழா முடிந்ததும், தயாரிப்பாளர் சங்க குளறுபடிகளை, அவரும் தன்பங்குக்கு வெளியே எடுத்துப் போடுவார் என்கின்றனர்.