அன்பானவரை இழந்து வாடுகிறேன் ; தவறான தகவலை பரப்பாதீங்க - மீனா | அவதார் 2 : கேட் வின்ஸ்லெட் லுக் அவுட் | வின்னர் 2 உருவாகிறது | 20 ஆண்டுகள் ; மாறாத மாதவன் - சிம்ரன் நெகிழ்ச்சி | அதே படம்... அப்பா இசையமைத்த மற்றொரு ஹிட் பாடலை பயன்படுத்திய யுவன் | கமலையும், மம்முட்டியும் இணைக்கும் விஸ்வரூபம் எடிட்டர் | திலீப்பின் பறக்கும் பப்பன் படத்துக்கு இசையமைக்கும் அனிருத் ? | எம்ஜிஆர் பட கதை... ரஜினியின் டைட்டில் ; அசத்தும் நயன்தாரா பட இயக்குனர் | நான் வில்லன் இல்லை ; கடுவா ரகசியம் உடைத்த விவேக் ஓபராய் | குஷ்பு தொடரில் புதிய ஹீரோ |
70களின் இறுதியிலும் 80களிலும், 90களிலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிப் படங்களில் நடித்தவர் நடிகை ஜெயப்பிரதா. அதன் பின் அரசியலில் இறங்கி தெலுங்கு தேசம் கட்சியில் சில காலம் இருந்தார். பின்னர் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார். எம்பி தேர்தலில் வெற்றி பெற்று எம்பி ஆகவும் பதவி வகித்தார். அவரையும் சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் ஆக பதவி வகித்த அமர்சிங்கையும் பற்றி பல்வேறு வதந்திகள் வெளிவந்தன. அமர் சிங்கைத்தான் தன் அரசியல் காட் பாதர் என்றவர் ஜெயப்பிரதா.
கடந்த சில வருடங்களாக அரசியலில் கூட ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார். சமீபத்தில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தான் ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் பேசியுள்ளார்.
“என்னுடைய மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளிவந்த போது அமர் சிங் டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்தார். நான் தினமும் அழுது கொண்டிருந்தேன். வாழ்வதற்கே பிடிக்கவில்லை. தற்கொலை செய்து கொள்ளவும் விரும்பினேன். எனக்கு ஆதரவாக யாருமேயில்லை. அந்த கால கட்டத்தில் அமர் சிங் மட்டுமே ஆதரவாக இருந்தார். நாளை நான் உயிரோடு இருப்பேன் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது. ஒவ்வொரு நாளும் வீட்டை விட்டு வெளிவரும் போது அதைத்தான் என் அம்மாவிடம் சொல்வேன்,” என்று தெரிவித்துள்ளார்.
ஜெயப்பிரதா மீண்டும் ஆந்திர அரசியலில் ஈடுபடப் போவதாக ஏற்கெனவே செய்திகள் வெளிவந்துள்ளன. இருப்பினும் அவர் இன்னும் தீவிர அரசியலில் இறங்கவில்லை.