Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரசிகர்கள் கணக்கில் விஸ்வாசம் 223 கோடி, பேட்ட 210 கோடி ?

02 பிப், 2019 - 15:30 IST
எழுத்தின் அளவு:
Fans-Petta,-Viswasam-collection.?

2019ம் ஆண்டின் மிகப் பெரும் படங்களாக வெளிவந்த 'பேட்ட, விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்களுமே குறிப்பிடத்தக்க லாபத்தைக் கொடுத்திருக்கிறது. ஆனால், அது பற்றிய முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

பிப்.,1ம் தேதி ஐந்து புதிய படங்கள் வெளிவந்ததால், 'பேட்ட, விஸ்வாசம்' இரண்டு படங்களின் தியேட்டர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதற்கிடையே இந்த இரண்டு படங்களின் வசூல் கணக்கை அவரவர் ரசிகர்களே வெளியிட்டு அவர்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்கள். 'விஸ்வாசம்' படம் 222 கோடி ரூபாயை வசூலித்துவிட்டதாம். 'பேட்ட' படம் 200 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிட்டதாம்.

'விஸ்வாசம்' படம் தமிழ்நாட்டில் சுமார் 160 கோடி ரூபாய், கர்நாடகாவில் 11 கோடி, கேரளாவில் 5 கோடி, மற்ற மாநிலங்களில் 4 கோடி, வெளிநாடுகளில் 43 கோடி என 223 கோடியைத் தொட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

'பேட்ட' படம் தமிழ்நாட்டில் 98 கோடி, மற்ற மாநிலங்களில் 42 கோடி, வெளிநாடுகளில் 70 கோடி என 210 கோடியை வசூலித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்கள்.

அஜித் ரசிகர்களைப் பொறுத்தவரையில் ரஜினி படத்தை விட வசூல் அதிகமிருக்க வேண்டும் என்பதில் மட்டும் கணக்கை சரியாகப் போட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார்கள்.

இன்னும் அடுத்த சில நாட்களுக்கு மீண்டும் 'பேட்ட, விஸ்வாசம்' வசூல் சண்டையை அதிகம் பார்க்க முடியும். இரண்டு படங்களும் கடைசி கட்ட ஓட்டத்தில் இருப்பதே அதற்குக் காரணம்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
தனுஷ் உடன் இணையும் கருணாஸ் மகன்தனுஷ் உடன் இணையும் கருணாஸ் மகன் தற்கொலை செய்ய விரும்பினேன் - ஜெயப்பிரதா அதிர்ச்சித் தகவல் தற்கொலை செய்ய விரும்பினேன் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

03 பிப், 2019 - 14:35 Report Abuse
Arul Krish hahaha.....rasigargal kanaku epovumey happy kanaku
Rate this:
Sathish Rajendran - coimbatore,இந்தியா
02 பிப், 2019 - 16:13 Report Abuse
Sathish Rajendran இதில் பாதியாவது "பேரன்பு" "Tolet" போன்ற நல்ல படங்களுக்கு ஆதரவு குடுக்க மாட்டார்கள். முட்டாள் ரசிகர்கள்...
Rate this:
JMK - Madurai,இந்தியா
02 பிப், 2019 - 15:53 Report Abuse
JMK தப்பு தப்பு விசுவாசம் எட்டு நாளில் 1000 கோடி பேட்ட எட்டு நானல்ல 100 cr ha ha ஆயிரம் / ரெண்டாயிரம் / மூவாயிரம் / நாலாயிரம் / மாமா பிஸ்கோத்து ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in