விஜய் 68 : முதல் பாடலுக்கு நடனம் அமைக்கும் பிரபுதேவா | அஜர்பைஜான் கிளம்பிய அஜித் - த்ரிஷா : ஒரு வழியாக துவங்குகிறது ‛விடாமுயற்சி' | 32 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி - அமிதாப் கூட்டணி : வந்தாச்சு அறிவிப்பு | ரஜினி படத்தில் இணைந்தார் பஹத் பாசில் | ரிபெல் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | எனக்கு யார் அறிவுரையும் தேவையில்லை : எதிர்நீச்சல் நந்தினி | இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ஜாலியாக ஊர்சுற்றும் சின்னத்திரை த்ரீ ரோஸஸ் | ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் | மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா |
நடிகை பானுப்பிரியா தி.நகரில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வேலை செய்ய ஆந்திராவில் இருந்து சந்தியா என்ற சிறுமியை அவரது தாயார் பிரபாவதி வேலைக்கு சேர்த்தார். திடீரென பிரபாவதி, "தன் மகளுக்கு 18 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. பானுப்ரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் என் மகளை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்துகிறார்" என்று ஆந்திர போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் பானுப்பிரியா வீட்டில் இருந்த சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே பானுப்ரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன், பாண்டி பஜார் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் ஆந்திராவைச் சேர்ந்த 14 வயது சிறுமியை அவரது தாயார் ஒப்புதலுடன் வேலைக்கு சேர்த்தோம். இரண்டு மாதங்களுக்கு முன் அந்த சிறுமியின் தாயார் வீட்டுக்கு வந்தார். அவர் வந்து சென்ற பிறகு வீட்டில் இருந்த 10 சவரன் நகை, ஒரு லட்சம் பணம், ஒரு ஐபேட், ஒரு கேமரா, 2 வாட்ச் காணவில்லை. அவர்தான் திருடிச் சென்றுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து பாண்டி பஜார் போலீசார், பிரபாவதியை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர், மகளின் உதவியுடன் திருடியதை ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. இதனால் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.