ரஜினியை கண்டிப்பாக இயக்குவேன் : தேசிங்கு பெரியசாமி வெளியிட்ட தகவல் | மலையாள லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு | ஹிந்தி படத்தை வெளியிடுவதேன்? உதயநிதி பதில் | சிறந்த அறிமுக ஹீரோவுக்கான விருது பெற்ற சதீஷ் | கவர்னருடன் சந்திப்பு ; மீண்டும் அரசியல் வரும் திட்டமா - ரஜினி பதில் | பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி |
போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் பிங்க் ரீமேக் படத்தில் வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிப்பதை சமீபத்தில் படக்குழுவினர் உறுதிப்படுத்தியிருந்தனர். இதுப்பற்றி ஸ்ரத்தா ஸ்ரீநாத் கூறியிருப்பதாவது :
அஜித் படத்தில் நடிக்கிறேன் என வதந்திகளும், யூகங்களும் வந்தன. அது உண்மையாகிவிட்டது. இதை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த அற்புதமான படத்தில் நானும் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சி.
இந்த படத்தில் நான் நடிப்பது குறித்து நெருக்கமானவர்கள் கேட்டபோதுகூட என்னால் அதை உறுதிப்படுத்த முடியாமல் இருந்தது. இப்போது படக்குழுவே அறிவித்து விட்டார்கள். ஆர்வமும், பதட்டமும் கலந்துள்ளது. அஜித்துடன் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களில் இது சவாலான வேடமாக இருக்கும் என்பதை என்னால் சொல்ல முடியும்.
எச்.வினோத், போனிகபூர், நீரவ்ஷா, யுவன்சங்கர் ராஜா இப்படியான ஒரு அணியுடன் நடிக்க ஒருவர் ஆசைப்பட மட்டுமே முடியும். இந்த கதை அனைவரும் பார்க்க வேண்டியது மட்டுமின்றி, இன்றைய சூழலில் தேவையான ஒன்று என பதிவிட்டுள்ளார் ஸ்ரத்தா ஸ்ரீநாத்.