விக்ரம்' பட பிரமோஷனில் 'பஞ்சதந்திரம்' குழு | தாஜ்மஹால் என்னது, மீனாட்சி கோயில் உன்னது - ஒற்றுமைக்கு பாலம் போடும் கமல் | சுந்தர்.சி - குஷ்புவின் மகள் சினிமாவில் அறிமுகமாகிறார் | ஒருவேளை மங்காத்தா 2வாக இருக்குமோ - வைரலான புகைப்படம் | போதைப்பொருள் வழக்கு - ஷாருக்கான் மகன் ஆரியன் கான் அப்பாவியாம் | விக்ரம் படத்தில் சூர்யாவின் கேரக்டர் | கன்னட படத்தில் நடித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை | கேரள முதல்வரை சந்தித்த பாதிக்கப்பட்ட நடிகை | மலையாளத்தில் இன்று ஒரே நாளில் 2 போலீஸ் படங்கள் ரிலீஸ் | ஷங்கர் - ராம்சரண் படத்தின் டைட்டில் ‛அதிகாரி' |
'கோச்சடையான்', 'வேலையில்லா பட்டதாரி 2' ஆகிய இரண்டு படங்களை இயக்கினார் ரஜினிகாந்தின் மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த். இரண்டு படங்களும் கமர்ஷியலாக வெற்றியடையவில்லை. எனவே சினிமாவிலிருந்து விலகி இருந்தவர், தற்போது கல்கி எழுதிய சரித்திர காவியமான 'பொன்னியின் செல்வன்' நாவலை வெப் சீரீஸாக தயாரிக்கிறார்.
எழுத்தாளர் கல்கியின் இந்த நாவலை படமாக்க எம்ஜிஆர், கமல் உட்பட தமிழ் திரையுலகில் பலர் முயற்சித்தனர். அது நிறைவேறவில்லை. இந்நிலையில், தன்னுடைய அடுத்தப்படமாக பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். விக்ரம், விஜய்சேதுபதி, ஜெயம்ரவி ஆகியோர் நடிக்க உள்ளனர்.
இந்த நேரத்தில் சவுந்தர்யா ரஜினிகாந்த், அதனை வெப் சீரீஸாக தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது மணிரத்னம் தரப்பை அப்செட்டாக்கி இருப்பதாக தகவல்.
பல ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட சோழ அரச பரம்பரையின் ஆட்சி காலத்தை பற்றிய வீரம், காதல், நகைச்சுவை கலந்த விறுவிறுப்பான காவியம் 'பொன்னியின் செல்வன்'. இந்த தொடரை சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோருடன் பணிபுரிந்து அனுபவம் பெற்ற சூர்யபிரதாப் இயக்குகிறார். இந்த வெப் சீரீஸ் ஹிந்தி மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம் போஜ்புரி, பஞ்சாபி ஆகிய மொழிகளிலும் உருவாகவுள்ளது.