விக்ரம்' பட பிரமோஷனில் 'பஞ்சதந்திரம்' குழு | தாஜ்மஹால் என்னது, மீனாட்சி கோயில் உன்னது - ஒற்றுமைக்கு பாலம் போடும் கமல் | சுந்தர்.சி - குஷ்புவின் மகள் சினிமாவில் அறிமுகமாகிறார் | ஒருவேளை மங்காத்தா 2வாக இருக்குமோ - வைரலான புகைப்படம் | போதைப்பொருள் வழக்கு - ஷாருக்கான் மகன் ஆரியன் கான் அப்பாவியாம் | விக்ரம் படத்தில் சூர்யாவின் கேரக்டர் | கன்னட படத்தில் நடித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை | கேரள முதல்வரை சந்தித்த பாதிக்கப்பட்ட நடிகை | மலையாளத்தில் இன்று ஒரே நாளில் 2 போலீஸ் படங்கள் ரிலீஸ் | ஷங்கர் - ராம்சரண் படத்தின் டைட்டில் ‛அதிகாரி' |
கேரளாவில் தமிழ், மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்திப்படங்களும் குறிப்பாக முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியாவது வழக்கத்தில் உள்ளது.
மலையாள முன்னணி நடிகர்கள் நடித்து வெளியாகும் படங்களே கேரளாவில் சுமார் 300 முதல் 400 தியேட்டர்களில் தான் வெளியாகின்றன. தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயக நடிகர்களான ரஜினி, கமல், விஜய் அஜித், சூர்யா, கார்த்தி, விக்ரம், தனுஷ் போன்ற நடிகர்கள் நடிக்கும் படங்கள் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகி வந்தன.
இதனால் சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள், சிறிய நடிகர்கள் நடிக்கும் மலையாள படங்களை ரிலீஸ் செய்வதற்கு கேரளாவில் போதுமான தியேட்டர்கள் கிடைக்காமல்போனது. எனவே மலையாள திரையுலகினர் ஒன்று கூடி சமீபத்தில் ஒரு முடிவை எடுத்தனர். அதாவது, மலையாளம் தவிர்த்து தமிழ் உள்ளிட்ட பிற மொழி படங்களை 125 தியேட்டர்களுக்கு மேல் வெளியிட கூடாது என்று முடிவெடுத்தனர்.
இதன் தொடர்ச்சியாக பிற மொழிப்படங்களின் கேரள உரிமையை குறிப்பிட்ட தொகைக்கு மேல் வாங்கக் கூடாது என்ற முடிவையும் எடுக்க உள்ளனர். சமீபத்தில் வெளியான விஸ்வாசம் மற்றும் ரஜினியின் 'பேட்ட' படங்களை பெரிய விலை கொடுத்து வாங்கிய கேரள விநியோகஸ்தர்களுக்கு பெரிய லாபம் இல்லை. பல இடங்களில் நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே இப்படி ஒரு கட்டுப்பாட்டை கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.
மலையாள சினிமா துறையினர் எடுத்துள்ள இந்த முடிவால், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் வியாபார விஷயங்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.